தேசிய அரசாங்கத்தின் கொள்கையை மீறிய ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

தென், மத்திய மற்றும் மேல் மாகாண பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் எதிர்வரும் வாரம் ஒழுங்காற்று முறைக்குழுவின் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த நபர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தின் கொள்கையை மீறி அறிக்கைகளை வெளியிட்டுள்ளதனால் குறித்த நபர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கமைய தண்டனைகளை வழங்கவுள்ளதாகவும் ஐ.தே.கட்சியின் மூத்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.