புதிய ஜனா­தி­பதி அர­சியல் கைதி­களை விடு­விப்பார் - அருட்தந்தை சக்­திவேல்  

20 Nov, 2019 | 11:41 AM
image

(ஆர்.விதுஷா)

தமிழ்,  - முஸ்லிம்  மக்­களை  தம்­முடன்  ஒன்­றி­ணை­யு­மாறு  ஜனா­தி­பதி கோத்தபாய  ராஜ­பக் ஷ அழைப்பு  விடுத்­தமை  வர­வேற்­கத்­தக்­கது  என்று  தெரி­வித்த  அர­சியல்  கைதி­களின் விடு­த­லைக்­கான தேசிய  இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர்  வண. பிதா  சக்­திவேல்  புதிய  ஜனா­தி­பதி  தமிழ்  அர­சியல் கைதி­களை  விடு­விப்பார்  என  நம்­பு­வ­தா­கவும்   தெரி­வித்தார்.  

ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம்  கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்த­பாய ராஜ­ பக்ஷ பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து அரசியல்  கைதி­களை  விடு­தலை  செய்­வ­தற்­கான  அமைப்பின்  நிலைப்­பாடு தொடர்பில்  வின­வி­ய­போதே  அவர்  இதனை  தெரி­வித்தார்.

அவர் இது தொட ர்பில்  மேலும்  தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ஷ தமிழ்  மக்­க­ளையும் தன்­னுடன்  ஒன்­றி­ண­யு­மாறு  அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். இந்­நி­லை யில்  தமிழ் அர­சியல் கைதி­களின்  விடு­தலை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தி க­ளான மஹிந்த ராஜ­பக்  ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் ஆட்­சிக்­ கா­லத்­திலும் வேண்­டு­கோள்­களை முன் ­வைத்­தி­ருந்தோம்.  

இருப்­பினும் தகுந்த தீர்வு எமக்கு  கிடைக்­க­வில்லை. இந்­நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்திரிபால  சிறி­சேன ஆட்­சிக்கு  வந்த 2015 ஆம்  ஆண்டின் முற்­ப­குதியில்  அர­சியல் கைதி­யொ­ருவர் விடு­விக்­கப்பட்­டி­ருந்தார். ஆகவே, ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி இத்­த­கைய கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும் என்று தெளி­வாக  தெரி­கின்­றது. அந்தவகையில் புதிய ஜனா­தி­பதி  தமிழ் அர­சியல் கைதி­களின் விடயம்  தொடர்பில்  கவனம் செலுத்தி அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெடுப்பார் என்ற நம்­பிக்கை எமக்கு உள்ளது.  தமிழ்  மக்கள் அவ­ருடன்  ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மாயின் அர­சியல் ரீதி­யான  அவர்­க­ளு­டைய  பிரச்சி னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம் பிக்கை  அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.  அந்தவகையில்   புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின்  நம்பிக்கையை  வென்றெடுப் பார் என நம்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51