திருமணத்திற்கு பின் ஒவ்வொரு தம்பதியர்களின் இலக்காகவும், ஒவ்வொரு குடும்பங்களின் அடிப்படைப் பற்றுகோடாகவும் இருப்பது குழந்தை. மாசடைந்த சூழல், பணிச்சுமை, பொருளாதாரத் தேடலின் காரணமாக அலட்சியப்படுத்தப்பட்ட ஆரோக்கியம் போன்ற பல காரணங்களால் இன்றைய தலைமுறையினர் மகப்பேறின்மை பிரச்சினைக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும்குறிப்பிடத்தக்க அளவில் பங்கு இருக்கிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வு இருந்த போதிலும், இது தொடர்பான மக்களின் சந்தேகங்கள் குறைந்தபாடில்லை. வீரகேசரிக்கு வந்த வாசகர்களின் கடிதங்களில் சிலவற்றை மரபு கருதி பெயரை தவிர்த்து டொக்டர்களிடம் முன்வைத்தோம். அவர்கள் அளித்த பதில்கள் மற்றும் விளக்கங்கள் இதோ..

வினா : எனக்கு ஃபைப்ராய்ட் கட்டிகள் அதிகமாக உள்ளது. உடல் எடையோ 110 கிலோ என்னால் கருதரிக்க இயலுமா?

விடை : நிச்சயமாக முடியும். ஏனெனில் நாங்கள் எங்களுடைய மருத்துவமனையில் சில மாதங்களுக்குமுன் இந்திய பெருநகர்ச்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஒருவர் , அவரின் உடை எடை (120 கிலோ) யுடன்கூடியவர் வந்து எம்மால் கருதரிக்க இயலுமா? என சங்கடத்துடனும், தயக்கத்துடனும் கேட்டார். நாங்கள் அவரை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு 20க்கும் மேற்பட்ட ஃபைப்ராய்ட் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அப்பெண்க்கு எடுத்துரைத்து அப்பெண்ணின் பரிபூரண ஒத்துழைப்புடன் அதனை ஒரே முறையில் சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றினோம். ஏறத்தாழ ஐந்து மணிதியாலங்கள் வரை அந்த சத்திர சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் அவர் தற்போது செயன்முறை கருத்தரிப்பிற்கு தயாராக்கி, தற்போது கருவுற்றிருக்கிறார். பொதுவாக பெண்ணிற்கு இரண்டு அல்லது மூன்று ஃபைப்ராய்ட் கட்டிகள் இருந்தாலே இதைக் காரணம் காட்டி அவர்களுக்கு குழந்தை பேறு இல்லை என்று அறிவுறுத்தியிருப்பார்கள். ஆனால் நாங்கள் எங்கள்மருத்துவமனையில் உள்ள நவீன வசதி மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த ஃபைப்ராய்ட் கட்டிகளை அகற்றி. அவரின் உடல் எடையை இயல்புநிலைக்கு வரவழைத்து அவரை கருவுற வைத்திருக்கிறோம். அதனால் கருதரிப்பதற்கும் உடல் எடை மற்றும் அதிக அளவிலான ஃபைப்ராய்ட் கட்டிகள் ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கட்டணம் நியாயமானதாகவே இருக்கும் என்பதையும் நினைவுறுத்த விரும்புகிறோம்.

வினா : எனக்கு வயது முப்பது.தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறேன். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. எனக்கு புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. மது அருந்தும் பழக்கமும் இல்லை. ஆனால் நான் எப்படி குழந்தையின்மை பிரச்சினைக்கு ஆளானேன்?

விடை : முதலில் எம்மிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவரைப் பற்றி சொல்கிறேன். அவர் எம்மிடம் வந்தவுடன், எம்மால் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தமுடியாது. ஆனால் எமக்கு ஒரு குழந்தையை தாருங்கள் என்றார். அவரிடம் நாங்கள் குழந்தைகளை தருவதில்லை. ஆனால் அதற்கான சிகிச்சைகளை தான் வழங்குகிறோம். நீங்கள் முதலில் ஒரு மூன்று மாத கால அவகாசத்திற்க புகைப்பதை தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். நான் எந்த சிகிச்சையும் தரப்போவதில்லை. மூன்று மாதம் பிறகு உங்களுக்கு பிடித்த பரிசோதனை கூடத்தில் உங்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறித்து ஒரு பரிசோதனை செய்து அதன் அறிக்கையை எடுத்து வாருங்கள்.நீங்கள் புகைப்பதை நிறுத்தியிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தால் அதன் பின் சிகிச்சை பெறுங்கள். உயரவில்லை என்றால் வேறு இடத்தில் வேறு விதமான சிகிச்சையை தொடருங்கள் என்று சொல்லியிருந்தேன். அவர் மூன்று மாதம் கழித்து வந்தார். பத்து மில்லியனாக இருந்த அவரது உயிரணுக்களின் எண்ணிக்கை இருபது மில்லியனாக உயர்ந்திருப்பதாக அறிக்கை மூலம் தெரிவித்தார். அத்துடன் தொடர்ந்து சிகிச்சை எடுக்கவும் சம்மதித்தார். இதன் மூலம் நாங்கள் வலியுறுத்துவது முதலில் மருத்துவர்களை சந்திக்கவும். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார். இதை தவிர்த்து புகை பிடிக்கும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் உள்ளவர்களுக்கு குழந்தையிருக்கிறது. அந்த பழக்கம் இல்லாத எனக்கு குழந்தையில்லை என ஒப்பிடவேண்டாம். அதனால் உயிரணுக்களின் குறைவிற்கு இந்த இரண்டு விடயங்கள் மட்டும் தான் காரணம் என கருதவேண்டாம். மனச் சோர்வு, மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவும் காரணங்களாகலாம்.

வினா : உயிரணு குறைவாக இருக்கிறது என்று விந்து பரிசோதனையில் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து நான் என்ன செய்யவேண்டும்? அல்லது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

விடை : உயிரணுக்கள் அதிகமாகவும், வீரியமாகவும் இருப்பதால மட்டுமே கரு நின்றுவிடும் என்று கருத இயலாது. ஏனெனில் உங்களுக்கு இதை தவிர்த்து உடல் ரீதியாக தைராய்ட் பிரச்சினை, புரொலாட்டீன் பிரச்சினை, சர்க்கரை நோய் பாதிப்பு என வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அதனால் தான் மருத்துவர்கள் ஆண்களுக்கு விந்து பரிசோதனையுடன் இரத்த பரிசோதனையும் வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள். உடலுறவின் போது ஏற்படும் நோய் தொற்று அதாவது இன்ஃபெக்ஷன் காரணமாகவும் கூட கரு நிற்காமல் இருக்கலாம். இதனால் இதன் போது ஹோர்மோன் பரிசோதனை மற்றும் பொது பரிசோதனை கூட அவசியமாகிறது. இதன் மூலம் உங்களின் விரையின் அளவு,அதன் வெப்ப நிலை, விந்து வெளியேறும் போது தேவைப்படும் வெப்ப நிலை, விந்து வெளியேறுவதற்கு தடையாக இருக்கும் அமைப்பு ஆகியவற்றைப் பற்றி உறுதியாக தெரிந்துகொள்ளலாம்.

வினா : ஸ்பெர்ம் வாஷிங் என்றால் என்ன?

விடை : இது ஆண்களிடமிருந்து பெறப்படும் விந்தணுக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சை முறை.செயன்முறை கருத்தரிப்பின் போது அதாவது குறிப்பாக IUI & IVFஆகியவற்றின் போது ஆண்களின் உயிரணுக்கள் உடலில் உள்ள ரசாயனக்கூறுகளால் பாதிக்கப்பட்டிருக்கும். இதன் போது பெறப்பட்ட விந்தணுக்கள் மீது ஸ்பெர்ம் வாஷிங் எனப்படும் ரசாயனக்கூறுகளை பிரித்தெடுத்தெடுக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு, அதிலிருந்து நல்லதொரு தரமான வீரியமான தகுதியான உயிரணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவை செயன்முறை கருத்தரிப்பிற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் கருதரித்தலின் வெற்றிவீதம் அதிகமாகும்.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் இலங்கை: 075 205 4481, இந்தியா அலைபேசி எண்: 0091 7811 999 999

சந்திப்பு : பரத்

தொகுப்பு: புகழ்