நிர்வாண கலெண்டரில் ஆடுகள் ; மன்னிப்புக் கோரியது கால்நடை மருத்துவக் கல்லூரி

19 Nov, 2019 | 01:10 PM
image

லண்டனில் உள்ள ரோயல் கால்நடை மருத்துவக் கல்லூரி (Royal Veterinary College) மாணவர்கள் தொண்டு நிதி திரட்டுவதற்கு  நிர்வாண கலெண்டரை உருவாக்கியுள்ளனர்.

அதில் 7 மாணவர்கள் தங்களுக்கு முன்னால் ஆடுகளுடன் போஸ் கொடுத்துள்ளார்கள். இப்படம் சமூக ஊடகங்களில் சீற்றத்திற்கும் தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுத்தது.

இந்நிலையில், சைவ உணவு ஆர்வலர்கள் நிர்வாண கலெண்டர் குறித்து புகார் அளித்தனர்.

மேலும், படத்தைத் தாக்கி ஒரு டுவிட்டர் பயனாளர்,'கால்நடைகள் விலங்குகளை கவனித்து காப்பாற்ற வேண்டும் .... புகைப்பட வாய்ப்புக்காக அவற்றை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.' எனக் கூறியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த படம் இப்போது 2020 காலெண்டரிலிருந்து அகற்றப்பட்டுள்ளது, அத்தோடு ரோயல் கால்நடை மருத்துவக் கல்லூரி அதிபர் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் ரோயல் கால்நடை மருத்துவக் கல்லூரி ஒரு நல்ல காரணத்திற்காக பணம் மற்றும் விழிப்புணர்வை திரட்டுவதற்கான முயற்சிகளில் கடினமாக உழைக்கும் தங்கள் மாணவர்களுக்கு பெருமிதத்தோடு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. 

பல ஆண்டுகளாக, லண்டனில் உள்ள ரோயல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் தொண்டு நிதி திரட்டும் கலெண்டரை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34