ஜனா­தி­ப­திக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களை மீறிய  டொனால்ட் ட்ரம்ப்

19 Nov, 2019 | 11:51 AM
image

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்,  தனது ஜனா­தி­பதி பதவி நிலைக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களைப் பின்­பற்­றாது இரா­ணுவ மருத்­து­வ­ம­னை­யொன்றுக்கு நடு இரவு வேளையில்  விஜயம் செய்­துள்ளார்.

 மேரி­லான்ட்டில் பெதெஸ்டா எனும் இடத்­தி­லுள்ள  வோல்ட்டர் றீட் தேசிய இராணுவ மருத்­து­வ­ம­னைக்கு  கடந்த சனிக்­கி­ழமை டொனால்ட் ட்ரம்பால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த விஜயம் தொடர்­பான தக­வல்கள் நேற்று  திங்­கட்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன.

மேற்­படி மருத்­து­வ­ம­னையில்  நாட்டின் ஜனா­தி­ப­திக்கும் இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும்  சிகிச்சை அளிக்­கப்­பட்டு  வரு­கி­றது.

இந்­நி­லையில் 73 வய­தான ட்ரம்ப் எது­வித முன்­ன­றி­விப்­பு­மின்றி அங்கு விஜயம் செய்­தமை  அவ­ருக்கு ஏதா­வது உடல் பிரச்­சினை ஏற்­பட்டு உட­னடி சிகிச்சை பெற நேர்ந்­தி­ருக்­கலாம் என வதந்தி பரவ வழி­வகை செய்­துள்­ளது.

அவ­ரது விஜ­யத்தின்போது  முக்­கிய பிர­முகர் ஒருவர் வரு­வ­தாக மட்டும் மருத்­து­மனை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்டிருந்­தது.

ஏனெனில் முக்­கி­யஸ்­தர்கள் வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்டால் அந்த முக்­கி­யஸ்­தரின் பாது­காப்புக் கருதி அந்த மருத்­து­வ­ம­னையின் சில பகு­தி­களை மூட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி அங்கு வரு­வதை அறி­யாத மருத்­துவ­மனை உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ரது மருத்­து­வ­ப­ரி­சோ­த­னைக்­காக பின்­பற்­றப்­படும் விசேட நெறி­மு­றை­களைப் பின்­பற்­றாது இருந்­துள்­ளனர்.

இதனால்  அங்­கி­ருந்த  சிறிய மருத்­துவ குழு­வி­னரால் ட்ரம்­புக்கு  விரை­வான துரித மருத்­துவ பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த விஜ­யத்­திற்கு முதல் நாளான வெள்ளிக்­கி­ழமை  இரவு டொனால்ட் ட்ரம்ப் பூரண ஆரோக்­கிய நிலையில் காணப்­பட்­ட­தாக  கூறப்­ப­டு­கி­றது.

மேற்­படி  மருத்­துவ பரி­சோ­தனை குறித்து  அமெ­ரிக்க வெள்ளை மாளிகை ஊடக செய­லாளர் ஸ்ரெபனி கிறிஷ் கூறு­கையில், ட்ரம்­பிற்கு வரு­டாந்த  உடல் நலப் பரி­சோ­த­னையே மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­வித்தார்.

அதே­ச­மயம் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால் பதி­வேற்றம் செய்யப்பட்டசெய்­தியில்,  தான்  கடந்த பெப்ரவரி மாதம்  மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின்போது தனது உடல் நலம்  மிகவும் ஆரோக்கியமாகக் காணப்பட்டதாகவும் தனது நிறை 243  இறாத்தலாகவுள்ள  அதேசமயம் தனது  இரத்த அழுத்த அளவு 118/80 ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25