அவுஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவர் கைது

Published By: Digital Desk 3

19 Nov, 2019 | 10:54 AM
image

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

காட்டுப்பகுதி மட்டும் இன்றி புதர் படர்ந்திருந்த பகுதிகளிலும் தீ பற்றி எரிகிறது. வறண்ட வானிலை காரணமாக தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவி வருகிறது.

இந்த காட்டுத்தீயில் இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 10 ஆயிரம் ஹெக்டேயருக்கு அதிகமான வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் 51 வயதான நபர் ஒருவர் தான் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்ததும், அதன் மூலமே காட்டுத்தீ பரவியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொலிஸார் அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த நபர் வேண்டுமென்றே காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17