ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்க வில்லை எனவும் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய குழு நேற்று இவ்வாறு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதி அறிக்கையும் நேற்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.