அனை­வ­ருக்கும் நன்றி - தேர்தல் ஆணைக்­கு­ழுவின்  தலைவர் தேசப்­பி­ரிய 

18 Nov, 2019 | 10:36 AM
image

(எம்.மனோ­சித்ரா)

அமை­தி­யா­னதும் சுமுக­மா­ன­து­மான தேர்­தலை நடத்தி முடிப்­ப­தற்கு உத­விய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட சகல அரச தலை­வர்­க­ளுக்கும் நன்றி தெரி­வித்த தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, தேர்தல் காலத்தில் பக்க சார்­பாக செயற்­பட்ட அரச மற்றும் தனியார் ஊட­கங்கள் மீது கடும் விச­னத்­தையும் வெளி­யிட்டார். 

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான இறுதி முடி­வினை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் நடை­பெற்­றது. 

நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போது மேற்­கண்­ட­வாறு கூறிய ஆணைக்­கு­ழுவின் தலைவர் மேலும் தெரி­வித்­த­தா­வது : 

அமை­தி­யான முறையில் தேர்­தலை நடத்தி முடிப்­ப­தற்கு உத­விய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ, சபா­நா­யகர் கரு­ஜய சூரிய மற்றும் ஏனைய அனைத்து கட்சி தலை­வர்­க­ளுக்கும் தேர்­தல்கள் ஆணைக்­குழு நன்றி தெரி­வித்துக் கொள்­கி­றது. 

இலங்­கையில் முதன் முறை­யாக பத­வி­யி­லி­ருக்கும் ஜனா­தி­பதி நடு­நி­லைமை வகித்து பக்க சார்­பற்று செயற்­பட்­ட­மைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு விஷே­ட­மாக நன்றி தெரி­விக்­கின்றேன். 

தேர்­தலில் போட்­டி­யிட்ட சகல வேட்­பா­ளர்­களும், வேட்­பா­ளர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கட்­சியின் செய­லா­ளர்­களும் , ஆத­ர­வா­ளர்­களும் அமை­தி­யான தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினர். மேலும் சிவில் அமைப்­புக்கள் தொழிற்­சங்­கங்கள் என்­ப­வற்­றோடு தேர்­தலில் முக்­கிய பாகம் வகித்த வாக்­கா­ளர்­களும் அமை­தி­யான தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­மைக்கு நன்றி தெரி­விக்­கின்றேன். இந்த அமை­தி­யான நிலை­வ­ரத்தை இறுதி வரையில் தக்க வைத்துக் கொள்­வ­தற்கு பொலிஸ் மற்றும் முப்­ப­டை­யினர் உள்­ளிட்ட பாது­காப்பு துறை­யினர் முழு­மை­யாக தமது ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருக்­கின்­றனர். 

ஊட­கங்கள் மீது விசனம்

இம்­முறை நடை­பெற்­றதைப் போன்றே எதிர்­வரும் காலங்­க­ளிலும் பொலித்தீன் பாவ­னை­யற்ற தேர்­தல்கள் நடை­பெறும் என்று எதிர்­பார்க்­கின்றேன். எனினும் பக்க சார்­பாக செயற்­பட்ட தனியார் மற்றும் அரச ஊட­கங்­களை அவ்­வாறு செயற்­ப­ட­வி­டாமல் தடுப்­ப­தற்கு ஆணைக்­கு­ழுவால் முடி­யாமல் போனதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். சட்ட ரீதி­யான அரச ஊட­கங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு இருக்­கின்ற போதிலும் தனியார் ஊட­கங்­களை முறை­யாக வழி­ந­டத்­து­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் இல்­லா­மையே இதற்­கான கார­ண­மாகும். 

எனினும் சட்­டத்தை மீறி செயற்­பட்ட அரச ஊடக அதி­கா­ரிகள் மீது அர­சி­ய­ல­மைப்­பிற்­கேற்ப தேர்­தல்கள் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுக்கும். இதே வேளை தனியார் ஊட­கங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அல்­லது குறிப்­பிட்ட தனியார் ஊட­க­மொன்று தாம் குறித்த கட்­சிக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கின்றோம் என்­பதை பகி­ரங்­கமாக அறி­விப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அவ்­வா­றில்லை என்றால் எதிர்­கா­லத்தில் தேர்­தல்கள் இன்றி தனியார் ஊட­கங்­களின் பிர­தா­னி­க­ளுக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­கான அதி­கா­ரத்தை வழங்­கு­வது பொறுத்­த­மா­ன­தாக இருக்கும் என்று கரு­து­கிறேன். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழுவில் நிச்­சயம் கலந்­து­ரை­யா­டப்­படும். 

பாது­காப்பு துறை

தேர்­தலில் விமா­னப்­படை, கடற்­படை , இரா­ணுவம் மற்றும் பொலிஸார் அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­தாக முறைப்­பா­டுகள் எவையும் கிடைக்­காமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது. இதே போன்று எதிர்­கா­லத்­திலும் பாது­காப்­பு­து­றை­யினர் சீருடை அணிந்து அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டா­ம­லி­ருக்கும் நிலை­மையே காணப்­பட வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றோம். இது அர­சி­யல்­வா­தி­களின் நடை­முறைக் கோவை­களில் உட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய ஒரு விட­ய­மாக நான் கரு­து­கின்றேன். மேலும் அர­சியல் அதி­காரம் அற்ற அரச உத்­தி­யோ­கத்­தர்கள் சிறி­ய­ளவில் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­மையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. எனினும் இதுவும் கவ­லைக்­கு­ரிய வி­டய­மாகும். இவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். 

மதத் தலைவர்களின் தலையீடு

மேலும் கடந்த தேர்தல்களை விடவும் இம்முறை மதத் தலைவர்களின் அரசியல் தலையீடு குறைவாகவே காணப்பட்டது. மதத் தலைவர்களுக்கு ஏனைய சாதாரண பிரஜைகளைப் போன்று அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்விதத் தடையும் கிடையாது. ஆனால் தேர்தல் காலங்களில் அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு சட்டம் கிடையாது. எனவே இவ்வாறான செயற்பாடுகள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருப்பதில் அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47