113 ஐ பெறும் தீவிர முயற்­சியில் மஹிந்த  

18 Nov, 2019 | 10:49 AM
image

(ரொபட் அன்­டனி)

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில்  சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்­றி­பெற்­றுள்ள நிலையில் 113 ஐ பெறும் தரப்­பினர்   பாரா­ளு­மன்­றத்தில் ஆட்சி அமைப்­ப­தற்­கான  முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர்.     

அதற்­காக   பாரா­ளு­மன்­றத்தில்  113  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை  பெற்­றுக்­கொள்ளும் முயற்­சியில்   மஹிந்த தரப்பு  ஈடு­பட்­டுள்­ளது. அதன்­படி நேற்­றைய தினமும் நேற்று முன்­தினம் மாலையும்  ஐக்­கிய தேசிய கட்­சியின் பல எம்.பி.க்களுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

கோத்­த­பாய ராஜ­பக்ஷ இன்­றைய தினம் நாட்டின்  7ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில்  அதனைத் தொடர்ந்து   எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ  பிர­த­ம­ராக  பதவிப் பிர­மானம் செய்­து­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்த நிலை­யி­லேயே   அடுத்த பாரா­ளு­மன்ற  அமர்­வின்­போதே மஹிந்த தரப்­பினர் புதிய அர­சாங்­கத்தின் பெரும்­பா­மையை வெளிக்­காட்ட முயற்­சிப்­பதன் விளை­வா­கவே இவ்­வாறு  113 என்ற   பெரும்­பான்­மையை  பெறு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.    இதே­வேளை நேற்­றைய தினம்  கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து  ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் பலர்   தமது  அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர்.  

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர, விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ,   மற்றும்  டிஜிட்டல்  உட்­கட்­ட­மைப்பு தொடர்­பான    அமைச்­ச­ரவை அந்­தஸ்து அற்ற  அமைச்சர்    அஜித் பி பெரே­ராவும் தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கிறார்.  

இதே­வேளை  இது­தொ­டர்பில் கருத்து   வெளி­யிட்­டுள்ள  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்   தலைவர் மனோ கணேசன்   புதிய  ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் பிர­த­மரும் பத­வி­யேற்­பதே சம்­பி­ர­தாயம். எனவே அமைச்சர் தற்­போது  பதவி வில­கு­வது  நகைச்­சுவை என்று  தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அந்­த­வ­கையில் எதிர்­வரும் சில தினங்­களில் பாரிய கட்­சித்­தா­வல்கள் இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  தற்­போது   மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு  சுதந்­தி­ரக்­கட்­சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும்  பாராளுமன்ற  உறுப்பினர் குமார வெல்கம எவ்வாறான முடிவை எடுப்பார் என்பது தொடர்பில்  இதுவரை தெளிவற்றத்தன்மையே காணப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59