கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள்  கோத்தாபயவிற்கு ஆதரவு - நாமல் 

Published By: Vishnu

17 Nov, 2019 | 01:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பழமையான  அரசியல் செயற்பாடுகளில் இருந்து  வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இம்முறை மாற்றமடைந்துள்ளார்கள். வடக்கில்  நாங்கள் தோல்வி என்று கருத முடியாது.  வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் பழிவாங்களுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் ஒன்றினைந்து  பலமான அரசாங்கத்தினை தோற்றுவிப்பதற்கு  வழிமுறைகளை ஜனநாயக முறையின் ஊடாக  ஏற்படுத்தியுள்ளார்கள். மக்கள் விரும்பும் ஆட்சிமுறைமையினை  உருவாக்குவதற்கு பாராளுமன்றம் தொடக்கம் கிராமிய மட்டத்தில் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றிப்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரின்  தலைமையிலான அரசாங்கத்தினை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்  நன்றியினை தெரிவித்துக் கொள்ள  வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02