ஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து  சீனா - இந்தியா கூடுதல் அவதானம்

Published By: Digital Desk 4

17 Nov, 2019 | 08:52 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து உலக நாடுகள் பலவும் கூர்மையாக அவதானித்த நிலையில் சீனா - மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மிக நெருக்கமாகவே இந்த விடயத்தில் உள்ளது. இலங்கையின் அரசியல் தன்மையும் ஆட்சியாளர்களும் இரு நாடுகளுக்குமே மிகவும் முக்கியமானதாகும்.

இந்தியாவை பொறுத்த வரையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பை மையப்படுத்திய நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இலங்கை விடயங்களை கையாள்வதுடன்  சீனாவை பொறுத்தவரையில் தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தை மையப்படுத்திய நகர்வுகளுக்கு முன்னுரிமையளித்தே செயற்படுகின்றன.

எனவே தான் இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்தியா மற்றும் சீனா உன்னிப்பாக அவதாவனித்து வருகின்றன. ஆனால் எந்தவொரு சீன இராணுவ வளங்களையும், பிராந்தியத்திற்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இலங்கை அனுமதிக்க கூடாது என்பதுடன் இந்திய மூலோபாய நலன்களை கொழும்பு பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் டெல்லி எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை.

மஹிந்த ராஜிபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பில் தரித்து நிற்க அனுமதித்தார். இதனால் இந்தியா கடும் சினம் கொண்டது. இதனால் இரு தரப்பு உறவிலும் விரிசல் நிலை ஏற்பட்டது. இந்த நிலை மீண்டும் வந்து விட கூடாது என்பதில் இந்தியா மிகவும் அவதானத்துடன் உள்ளது. ஏனெனில் சீனாவின் அரசியல் மாணவனாகவே கோத்தபாய ராஜபக்ஷ காணுகின்றார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அடிப்படை அரசியல் சார்ந்த விடயங்களை சீனாவிலேயே கற்றுக்கொண்டார். எனவே மீண்டும் ஒருமுறை கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கி விடுமோ என்ற ஐயப்பாடு இந்தியாவிற்கு எப்போதும் இருந்ததுண்டு. மறுபுறம் அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்கவும் இந்தியா கரிசனையுடனேயே உள்ளது.

எனவே தான் இலங்கையின் நலன்களில் இந்தியா முன்பை விட தற்போது உணர்ந்து செயற்படுகின்றது. அதிகாரத்திற்கு  வரும்  எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயல்படவும்  இங்கிடம்பெறக் கூடிய எந்தவொரு புதிய மாற்றமும், பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியா முழுமையான புரிதலுடன் செயற்படுகின்றது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து இந்தியாவை போன்று சீனாவும் மிகவும் அவதானத்துடன் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01