தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார் ஜனாதிபதி

16 Nov, 2019 | 05:11 PM
image

(நா.தனுஜா)

சிறுநீரக நோயினால் அவதியுறும் அப்பாவி மக்களுக்கான செயற்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணிப்புவிடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்திய விசேட செயற்திட்டங்களுள் ஒன்றான பொலன்னறுவ சீன  - இலங்கை நட்புறவு தேசிய சிறு நீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை இன்று சனிக்கிழமை ஜனாதிபதி பார்வையிட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொண்ட சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜங் பிங்குனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக சீன அரசாங்கத்தின் பூரண அன்பளிப்பில் இந்த சிறுநீரக வைத்தியசாலை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நோய்க்காரணி கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் அவதியுறும் பல மாவட்டங்களை சார்ந்த மக்களின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தெற்காசியாவில் மிக விசாலமான சிறுநீரக வைத்தியசாலையாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையை அண்மித்ததாக இப்புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகின்றது.

இதன் 70 சதவீத நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், 2020 ஜூலை 30ஆம் திகதியளவில் சகல நிர்மாணப் பணிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து மருத்துவமனையை மக்களின் பாவனைக்கு கையளிக்க முடியுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.

204 கட்டில்கள், 100 இரத்த சுத்திகரிப்பு உபகரணங்கள், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட உலகின் மிக நவீன உபகரணங்களைக் கொண்ட பரிசோதனைக்கூடம் மற்றும் அதிதொழிநுட்ப வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனை, 12 பில்லியன் ரூபா நிதி முதலீட்டில் நிர்மாணிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் மருத்துவமனை வளாகத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அதன் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன், அதனை விரைவில் நிறைவு செய்து சிறுநீரக நோயினால் அவதியுறும் நாடெங்கிலுமுள்ள அப்பாவி மக்களுக்கு அதன் நன்மைகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04