எவருக்கும் அஞ்சாதீர்கள்  ! கடமையை பக்கச்சார்பின்றி செய்யுங்கள் -  அரச ஊழியர்களுக்கு தேசப்பிரிய  அறிவுறுத்தல்

Published By: Priyatharshan

16 Nov, 2019 | 05:26 AM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் கடமைகளில் ஈடுப்படும்  அரச ஊழியர்கள் தமது பொறுப்பு குறித்து  சிறந்த புரிந்துணர்வுடன்  ஒருவருக்கு மாத்திரம் விசேட கரிசனை  காட்டாமல்  செயற்படுவார்கள் என்பது  எமது எதிர்பார்ப்பாகும். 

எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை ஆணைக்குழுவிற்கும், நீதிமன்றத்திற்கும் மாத்திரமே  அரசாங்க ஊழியர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தேர்தல் கடமைகளில் ஈடுப்படும் அரச ஊழியர்களுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளார்.

அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக  இன்று (2019.11.16 சனிக்கிழமை)  ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறவுள்ளது.  ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணி குறித்த பொறுப்பான  தேர்தலை நடத்தவதை வினைத்திறனாகவும்,  பக்கச்சார்பின்றியும் நிறைவேற்றும்  பொறுப்பினை   கௌரவமான வரலாற்றினை  கொண்ட அரச ஊழியர்களிடம்  தேர்தல் ஆணைக்குழு ஒப்படைத்துள்ளது.

 தேர்தலின் போது தமக்குரிய  பொறுப்பினை உரிய முறையில்  நிறைவேற்றும் பொருட்டு அரச ஊழியர்கள் முதல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் வரையான   தேர்தல் கடமைகளில் ஈடுபடும்  அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் தமது செயற்பொறுப்பு குறித்து  சிறந்த   கவனத்துடன் எவருக்கும் விசேட கரிசனை இன்றி  சுயாதீனமாக செயற்படுவார்கள் என்பது ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாகும்.

தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு குறித்து  வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.தேர்தலின் போது  வழங்கப்பட்டுள்ள  பொறுப்பு குறித்து கவனத்திலெடுக்கும் போது குறிப்பாக தேர்தல் நடைப்பெறும் போது  வாக்காளர்களுடன் போட்டியிடும் வேட்பாளர்களுடனும் மற்றும் அவர்களின் அனுமதி பெற்ற  முகவர்களுடனும் தாங்கள் நட்புறவுடன்  நடந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு கட்டத்தில்  வினைத்திறனுடனும், சுறுசுறுப்புடனும் பரஸ்பர உறனை பேணிக்கொள்ள வேண்டும்.

எவருக்கும் அஞ்சாதீர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கும்,நீதிமன்றத்திற்கும் மாத்திரமே அரச ஊழியர்கள் பொறுப்பு   சொல்ல வேண்டும். எவருக்கும் விசேட கரிசனை  காட்ட வேண்டிய தேவை கிடையாது. வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றும் போது   சிறந்த முறையில்   செயற்படுவது விசேட அம்சமாகும்.

 தேர்தலின் போது ஒப்படைக்கப்பட்டுள்ள  கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்கு அரச அலுவலர்கள் என்ற வகையில் நாட்டின் வாக்காளர்களுக்க கடமைப்பட்டுள்ளோம். ஆகையால்  வாக்காளர்கள் எதிர்பார்க்கும் செயற்பொறுப்பினை உயர்ந்தபட்சம்  நிறைவேற்ற வேண்டும். 

சுதந்திரமானதும், நீதியானதுமான ஒரு தேர்தலில் தமது மனசாட்சிக்கு அமைய வாக்களிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்துக் கொள்ளும்படியாக  மட்டுமன்றி அதனை உணரும் விதமாகவும் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36