8ஆவது ஜனாதிபதி யார் ? : ஜனாதிபதித் தேர்தல் இன்று !

Published By: Priyatharshan

16 Nov, 2019 | 04:14 AM
image

(ஆர்.யசி)

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்  ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 

இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில்  12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான  ஜனாதிபதி தேர்தல் இன்று நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறுகின்ற நிலையில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள சகல மக்களும் தமக்கான வாக்குகளை பதிவதற்கான சகல ஏற்பாடுகளும் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் நேரம்

அந்த வகையில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதுவரை காலமாக தேர்தல் நாட்களில் காலை 7 மணி தொடக்கம்  பிற்பகல் 4மணி வரையும் வாக்களிக்க முடியும் என நேர ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை மேலதிகமாக ஒரு மணிநேரம் அதிகமாக நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய வாக்காளர்கள் பிற்பகல் 5 மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

வாக்களிப்பு -வாக்கெண்ணும் நிலையங்கள்

அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக நாடளாவிய ரீதியில்   12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  அதேபோல் 1550 வாக்கெண்ணும் நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் 48 ஆயிரம் பேர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு கடமைகளில் 2 இலட்சம் அரச அதிகாரிகளும் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து  96 பேர் (15,994,096) ஆகும். இவர்களின் எண்ணிக்கை  22 தேர்தல் மாவட்ட அடிப்படையில்  கொழும்பு மாவட்டத்தில்- 1,670,403 வாக்காளர்களும்,  கம்பஹா மாவட்டத்தில் - 1,751,892 வாக்காளர்களும் , களுத்துறை மாவட்டத்தில்- 955,079 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில்  - 1,111,860 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில்- 401,496 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் - 569,028 வாக்காளர்களும், காலி மாவட்டத்தில்  - 858,749 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் - 652,417 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - 485,786 வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 564,714 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தில் - 282,119 வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் - 398,301 வாக்காளர்களும், திகாமடுல்லை மாவட்டத்தில் - 503,790 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் - 281,114 வாக்காளர்களும், குருநாகல் மாவட்டத்தில் - 1,331,705 வாக்காளர்களும், புத்தளம் மாவட்டத்தில் - 599,042 வாக்காளர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் - 682, 450  வாக்காளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் - 326,443 வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் - 657,766 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் - 366,524 வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் - 864,978 வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் - 676,440 வாக்காளர்களும் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வாக்காளர்கள்

அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 புதிய வாக்காளர்கள் தகுதியாகியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 15,044,490 பேர் வாக்களிக்க தகுதியானர்கள். எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க  15,994,096  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் புதிதாக இம்முறை 9 49,606 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வேட்பாளர்கள்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில்  அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை 35 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் 41 பேர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் இறுதியாக 35 பேர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் புதிய ஜனநாயக முன்னணி-சஜித் பிரேமதாச,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- கோத்தாபய ராஜபக்ஷ , தேசிய மக்கள் சக்தி- அநுரகுமார திஸாநாயக்க, ஜாதிக சங்வர்தன பெரமுன - பள்ளெவத்த கமலராளலாகெ றொஹான் பள்ளெவத்த, தேசிய மக்கள் இயக்கம் -ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க,   ஐக்கிய சோசலிச கட்சி - சிறிதுங்க  ஜயசூரிய , நவ சிங்கள உறுமய - சரத் மனமேந்திர, எங்கள் மக்கள் சக்தி கட்சி - வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, இலங்கை தொழிலாளர் கட்சி- ஏ.எஸ்.பி.லியனகே , முன்னிலை சோசலிச கட்சி- துமிந்த நாகமுவ , இலங்கை சோசலிச கட்சி - கலாநிதி அஜந்த விஜேசிங்க பெரேரா , ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி- ஆரியவங்ச திஸாநாயக்க , சோசலிச சமவுடைமைக் கட்சி - நம்புநாம நாணயக்கார அக்மீமன பள்ளியங்குருகே வஜிரபானி விஜயஸ்ரீவர்தன, நவ சமசமாஜக் கட்சி- பெத்தே கமகே நந்திமித்ர , ஜனநாயக தேசிய முன்னணி - அருண டி சொய்சா, சிங்கள தீப ஜாதிக பெரமுன- ஜயந்த லியனகே , ஜனசத பெரமுன- பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ருஹுனு  ஜனதா பெரமுன கட்சி - அஜந்த டி சொய்சா, ஐக்கிய சோசலிச கட்சி- வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா , மக்கள் அனைவரும் அரசர் - பிரியந்த முனிஹத் எதிரிசிங்க , தேசிய ஐக்கிய முன்னணி - நாமல் ராஜபக் ஷ, எமது தேசிய முன்னணி - சுப்ரமணியம் குணரத்தினம்,  சுயேட்சை வேட்பாளர் .- வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ , சுயேட்சை வேட்பாளர் - ஸ்ரீபால அமரசிங்க, சுயேட்சை வேட்பாளர்- சமரவீர வீரவன்னி, சுயேட்சை வேட்பாளர் - பொல்கம்பலராளலாகே சமிந்த அனுருத்த , சுயேட்சை வேட்பாளர்- கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா , சுயேட்சை வேட்பாளர்  -சந்திரசேகர ஹேரத் ஹிட்டிஹாமி கோராளலாகே சமன் ஸ்ரீ ஹேரத், சுயேட்சை சேட்பாளர்.- அஷோக வடிகமங்காவ சுயேட்சை வேட்பாளர் -அப்பரெக்கே புஞ்ஞானந்த தேரர்,  சுயேட்சை வேட்பாளர் - விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க , சுயேட்சை வேட்பாளர் - சாந்த குமார ஆனந்த வெல்கம சுயேட்சை வேட்பாளர் - பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சுயேட்சை வேட்பாளர்- இல்லியாஸ் ஐத்துரோஸ் மொஹமட் , சுயேட்சை வேட்பாளர் - வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சேலாகே சரத் விஜித குமார, சுயேட்சை வேட்பாளர் - எம்.கே.சிவாஜிலிங்கம், சுயேட்சை வேட்பாளர் - மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லாஹ் , சுயேட்சை வேட்பாளர்- குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி , சுயேட்சை வேட்பாளர்- கனே ஆரதச்சிகே மஹீபால ஹேரத் என வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர்.

வாக்குச்சீட்டு

ஜனாதிபதி வேட்பாளர்கள் எண்ணிக்கை இம்முறை அதிகரித்த காரணத்தினால் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களின் வாக்குச்சீட்டை  விடயம் இம்முறை வாக்குசீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் நீளமானது 26 அங்குலமாகும். ஆகவே மக்கள் வேட்பாளர்களின் பெயர்களை முழுமையாக தேடி வாக்களிக்க சிறிது நேட வினாடிகள் தேவைப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு

அதேபோல் கடந்த தேர்தலை விடவும் இம்முறை தேர்தலில் அதிக நிதி தேர்தல்கள் ஆணைகுழுவினால் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சகலதற்காகவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஆறு பில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இம்முறை தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் இரண்டு ஆயுதம் தரித்த பொலிசார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபடவுள்ளனர். அதன் அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு மாத்திரம் 25 ஆயிரத்து 712 பொலிசார் கடமையில் ஈடுபடுவார்கள். அதேபோல் வாக்களிப்பு நிலையங்களை மையப்படுத்திய விசேட பாதுகாப்பு உக்தியாக ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அவ்வாறு அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிக்கும் வண்ணம் 3043 ரோந்துக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு 2193 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் சில பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் கலகத்தடுப்பு பிரிவினரும் பொலிசாரும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வீதி சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின்  கண்காணிப்பு

தேர்தல்கள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் சர்வதேச நாடுகளில் நான்கு கண்காணிப்புக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோல் இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு குறித்த சிவில் அமைப்புகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04