ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி

15 Nov, 2019 | 09:25 PM
image

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமெரிக்கா மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர்  மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

2015 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்திற்கான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க முக்கிய பங்களிப்பை வழங்கியது என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை விலகிய பின்னர் இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் முக்கிய மன்றத்தில் பங்களிப்பு செய்வதை அமெரிக்கா கைவிட்டுள்ளது.

சீனா ஆசிய பிராந்தியத்தில் காலடி எடுத்துவைப்பது குறித்து மூலோபாய கரிசனை கொண்டுள்ள அமெரிக்கா மனித உரிமைகள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பது பிராந்தியத்தில் ஜனநாயக நாடுகள் பலமடைவதற்கு அவசியம் என்பதை அமெரிக்கா உணரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக  மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும் எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02