நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்

Published By: Priyatharshan

15 Nov, 2019 | 05:44 PM
image

(நா. தனுஜா)

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும் , நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாச்சாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என  பிரதமல் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து நாடு முழுவதும் ஜனநாயக தன்மையுடையதும், நியாயதிக்கத்திற்குட்பட்டதுமான அமைதியான சூழலொன்றை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். 

அத்தகைய ஜனநாயக , நியாயாதிக்க சூழலில் இடம் பெறுகின்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்  சுயாதீன ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திரமானதும் நியாயமானதும் , அமைதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு உரிய நிறுவனங்களுக்கும் , அதிகாரிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதே இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் எம் அனைவரினதும் கடமையாகும்.

தற்போது நாம் இத்தகைய சுதந்திரமான சூழ்நிலை மேலும் வலுப்படுத்த வேண்டும். மீண்டும்  கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாச்சாரம் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கு எம்மால் இயலுமான  அளவிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.  

எனவே அனைவரும் இன்றைய தினம் வாக்களிப்பதுடன் , இந்த ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதும், அமைதியானதுமான முறையில் நடைபெறுவதற்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து அமைதியான முறையில் செயற்படுமாறும் அனைவரிடமும் குறிப்பாக கேட்டுக்கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15