தேர்தல் கட­மை­களில் 2 இலட்சம் அரச ஊழி­யர்கள்: 60ஆயிரம் பொலிஸார், 3500அதி­ரடிப் படையினர்

Published By: J.G.Stephan

15 Nov, 2019 | 03:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்­கையின்  ஏழா­வது ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான  தேர்­தலின் வாக்குப் பதி­வுகள் நாளை இடம்­பெ­ற­வுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழி­யர்கள் தேர்தல் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் இவர்கள் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவ்­வ­தி­காரி குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில், தேர்­தல்கள் தொடர்­பி­லான பாது­காப்பு மற்றும் அது ­சார்ந்த பணி­களில் 60 ஆயி­ரத்து 175 பொலிஸார் ஈடு­ப­டுத்­த­ப்ப­ட­வுள்­ள­தா­கவும் அவர்கள் நேற்று, குறித்த  பகு­தி­க­ளுக்கு கட­மைக்­காக சென்­றுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 60175  பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக 3500 பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் நேர­டி­யா­கவே பாது­காப்பு உள்­ளிட்ட கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன்,    எண்­ண­ாயி­ரத்து 80 சிவில் பாது­காப்பு  படை­யினர்  பாது­காப்பு பணி­களில்  ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

தேர்­தல்கள் ஆணைக்குழுவின்  தக­வல்­களின் பிர­காரம், வாக்­கெண்ணும் பணி­களில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழி­யர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். அத­னை­விட ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான அரச ஊழி­யர்கள் வாக்­க­ளிப்பு நிலைய பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக சுமார் 10 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் நலன்­புரி மற்றும் போக்­கு­வ­ரத்து கட­மை­களில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 குறைந்த பட்சம் ஒரு வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் 8 அரச ஊழி­யர்கள் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர் எனவும் வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் தேவைக்கேற்ப அந்த எண்­ணிக்கை அதி­க­ரிக்­க­ப்படும் எனவும் தேர்­தல்கள் ஆணைக்குழு தெரி­வித்­துள்­ளது.

 இதே­வேளை, வாக்குப் பெட்­டி­களை வாக்­க­ளிப்பு நிலையங்­க­ளுக்கு எடுத்துச் செல்லல் மற்றும் அங்­கி­ருந்து வாக்­கெண்ணும் நிலை­யங்­க­ளுக்கு எடுத்துச் செல்லல், அது­சார்ந்த பணி­களில் ஈடு­படும் ஊழி­யர்­களின் போக்கு வரத்து போன்ற பணி­க­ளுக்­காக இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான  5800 பஸ் வண்­டிகள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அந்த சபை தெரி­வித்­துள்­ளது.

தேர்தல் பாது­காப்பு நட­வ­டிக்கை தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கருத்துத் தெரி­விக்­கையில்,

'இம்­முறை 12856 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கும் இரு  ஆயுதம் தரித்த பொலிஸார் வீதம் பாது­காப்பு வழங்­கப்­படும்.  இவ்­வாறு பாது­காப்பு வழங்கும் அனை­வரும் ஆண் உத்தி­யோ­கத்­தர்­க­ளாவர். தேர்ந்­தெ­டுக்­கப்பட்ட சில வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் மட்டும் ஒரு ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரும் ஒரு பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரும் கட­மையில் ஈடு­ப­டுத்­த­ப்படுவர். அதன்­படி வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் பாது­க­ாப்­புக்கு மட்டும் 25 ஆயி­ரத்து 712 பொலிஸார் கட­மைகளில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

அனைத்து வக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளையும்  கண்­கா­ணிக்கும் வண்ணம் 3043 ரோந்து குழுக்கள் தயார் செய்­யப்பட்­டுள்­ளன.  ஒரு குழுவில்  ஒரு பொலிஸ் பரி­சோ­தகர் தர அதி­கா­ரியும்  ஒரு சார்ஜன்ட் அல்­லது கான்ஸ்­ட­பிலும் இரு சிவில் பாது­காப்பு படை­யி­னரும் உள்­ள­டங்­கி­யி­ருப்பர். அதன்­படி ரோந்துப் பணியில் 6086 பொலி­ஸாரும் சிவில் பாது­காப்புப் படை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர். இதே­வேளை, நாட­ளா­விய ரீதியில் 43 வாக்­கெண்ணும் நிலை­யங்கள் ஸ்தாபிக்­கப்பட்­டுள்­ளன. ஒவ்­வொரு வாக்­கெண்ணும் நிலை­யத்­தி­னதும் பாது­காப்­புக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அல்­லது பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இருக்கும்.  ஒரு வாக்­கெண்ணும் நிலை­யத்தில்  5 பொலிஸ் பரி­சோ­தகர் தர அதி­கா­ரிகள்,  5 சார்­ஜன்கள், 40 கான்ஸ்­ட­பிள்கள் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­த­ப்படுவர்.  அதன்­படி வாக்­கெண்ணும் நிலை­யங்­களின் பாது­காப்­புக்கு மட்டும் மொத்­த­மாக 2193 பேர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

 அத்­துடன் நாட­ளா­விய ரீதியில் அடை­யாளம் காணப்பட்­டுள்ள இடங்­களை மையப்படுத்தி 153 கலகத் தடுப்புக் குழுக்கள் நிலை­கொள்ளச் செய்­யப்பட்­டுள்­ளன. இதில் 54 குழுக்கள் பூரண கலகத் தடுப்புக் குழுக்­க­ளா­கவும் 99 குழுக்கள் அரை கலகத் தடுப்பு குழுக்­க­ளா­கவும் செயற்­படும்.

 பூரண கலகத் தடுப்பு குழு­வொன்றில் ஒரு பொலிஸ் பரி­சோ­தகர்,  ஒரு சார்ஜன்ட், 8 கான்ஸ்­ட­பி­ள்கள் இருப்பர். அரை கலகத் தடுப்பு குழுவில்  ஒரு பரி­சோ­தகர், ஒரு சார்ஜன்ட் மற்றும் 5 கான்ஸ்­ட­பிள்கள் இருப்பர். அதன்­படி கலகத் தடுப்பு பணி­களில் மட்டும் 1233 பொலிஸார் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.  தற்­போது நாட்டில் 137 நிரந்­தர வீதிச் சோதனை சாவ­டி­களை பொலிஸார் முன்­னெ­டுத்து வரும் நிலையில், அவற்­றுக்கு மேல­தி­க­மாக புதி­தாக 190 வீதிச் சோதனை சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி வீதிச் சோதனை  சாவடி கடமைகளில் மட்டும்  1688 பொலிஸாரும் 190 சிவில் பாதுகாப்பு படையினரும் கடமையாற்றவுள்ளனர்.

இதனைவிட பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமையில் இருக்கும்  பொலிஸாரின் நலன்புரி நடவடிக்கைகளை கண்காணிக்க தனியான குழுவும் தேர்தல்கள் முறைப்பாடுகளை பெற, விசாரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தனியான உத்தியோகத்தர்களும்  உளவுத் தகவல்களை சேகரிக்க தனியான படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28