மட்டக்களப்பில் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

Published By: Priyatharshan

15 Nov, 2019 | 01:18 PM
image

எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பொலிஸ்பாதுகாப்புடன் வாக்குபெட்டிகள் இன்று காலை 428 வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்புதேர்தல் தொகுதியில் 1,8 7682 பேரும் கல்குடா தொகுதியில் 1,15974 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 94, 645 பேருமாக 3,98,301 வாக்காளர்கள் இந்த ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்கதகுதிபெற்றிருப்பதாகவும்  இந்ததேர்தலுக்காக 4991 அரசஉத்தியோகத்தர்களும் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலீஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

12 ஆண் பெண் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 428 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அரச ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியான மொத்தவாக்காளர்களுக்கும் நீதியானதும் நேர்மையானதும் சுதந்திரமானதுமான  வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு வயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் வாக்களிக்க தேவையான சகல வசதிகளும் வாக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் வாக்கெண்ணும் நிலையங்களுக்காக பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர ரோந்துப்பணியில் விசேட பொலீஸ் பிரிவினர் பங்கெடுக்கவுள்ளனர்.

இன்று 15 ஆம் திகதி வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கு என  54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளனர்.

தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச உள்நாட்டு கண்காணிப்பாளர்கள்  தங்களது கண்காணிப்பு பணியினை ஏற்கெனவே  ஆரம்பித்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர்தெரிவித்தார்.

இதுவரை 53 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் 18 முறைப்பாடுகளுக்குரிய தீர்வு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஆறுமுறைப்பாடுகள் வன்முறைகளாகவும் 47 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறுதல்களாகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21