நாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி !

Published By: Priyatharshan

15 Nov, 2019 | 09:33 AM
image

நாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை ( 16.11.2019 ) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன.

இந்நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குச் சீட்டுக்கள் மற்றும் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் கொண்டு செல்லப்படவுள்ளன.

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளையதினம் ஒரு கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

12 ஆயிரத்து 845 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர். நாளைய தினம் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியும்.

தேசிய அடையாள அட்டை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை வாக்களிப்பிற்காக பயன்படுத்த முடியும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமது பெயர், வாக்காளர் பெயர் பட்டியலில் இருக்குமாயின் அவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் உட்பட ஏனைய ஆவணங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று முற்பகலில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. இவற்றுடன் அதிகாரி ஒருவரும் செல்லவுள்ளார்.

உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் இணைந்துகொண்டுள்ளனர். தென்னாபிரிக்க மனித உரிமைகள் அமைப்பு, இந்தோனேசியா, இந்தியா, மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் கண்காணிப்புப் பணியில் இணைந்துகொண்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் இந்தக் கண்காணிப்பாளர் இன்று பணியில் இணைந்துகொண்டனர். அவர்கள் குறித்த மாவட்டங்களின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களைச் சந்திப்பதற்கும் தீர்மானித்துள்ளனர்.

வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகிலுள்ள தபால் நிலையத்துக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். 

நாளை காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபறெவுள்ளது. மாலை ஐந்து மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்ததும்  வாக்குப் பெட்டிகள்   அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். 

ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல்கள் கடந்த ஒக்டோபர்  மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றன.  அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் முடிவுக்கு வந்தன.  அதன்படியே  நாளை எட்டாவது ஜனாதிபதி  தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்  இடம்பெறவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48