40 வருடங்களுக்குப் பின் விமான போக்குவரத்து வசதிகள் - சேவை வழங்கல் கட்டணத்தில் திருத்தம்

Published By: Digital Desk 3

14 Nov, 2019 | 05:19 PM
image

விமான போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவை வழங்கல் கட்டணம் அறவிடல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டணம்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும். இதனூடாக 2225.6 மில்லியன் நிதியினை வருடாந்த வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வான் போக்குவரத்து வசதிகள்   மற்றும் சேவை வழங்கல் கட்டணம்  அறவிடல் 40 வருட காலத்திற்கு பிறகு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  

இவ்விரு வழிமுறையின் ஊடாக அதிகளவான  நிதி ஈட்டிக் கொள்ள முடிகின்றது.   இலங்கையில்  இவ்வாறான வரிகளை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் கீழ் விமான சேவை  அதிகாரிகளுக்கு மாத்திரமே  விதிக்க முடியும்.  வான்போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவை வழங்கல் கட்டணம் 1981ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டது.

38 வருடத்திற்கு பிறகு  இக்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இப்புதிய கட்டண முறைமையின் ஊடாக வருடத்திற்கு 813மில்லியன் நிதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் வான்போக்குவரத்து எல்லையில் ஒரு நாளைக்கு  125 ற்கு இடையிலான விமானங்கள் பயணிக்கின்றன. இதற்கு முன்னர் வான் போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவை வழங்கல்   ஊடாக ஒரு நாளைக்கு 3.9  மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளது.  ஒரு வருடத்தில் இவ்விரு சேவையின் ஊடாக 1412.6 மில்லியன் நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

புதிய கட்டண திருத்தித்தின் ஊடாக ஒரு நாளைக்கு 6.1 மில்லியனும் வருடத்திற்கு 2225.6 மில்லியன் வரையிலான வருவாய் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 57 சதவீதமான வளர்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15