சகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் !

Published By: Digital Desk 3

14 Nov, 2019 | 05:05 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நேரகாலத்துடன் வாக்களித்துவிட்டு  தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் தேர்தல் சட்ட திட்டங்களை மதிக்கும் வகையில் முகத்திரை அணியும்  பெண்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது முகத்திரையை நீக்கி  ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும்வகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபை சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றது.

இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதித்தலைவர் அஷ்ஷேக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச்சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன்  வாக்களிக்கும்போது தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும் வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகத்திரையை நீக்கி  ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

பொதுவாக பெண்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்தளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக்கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.

அத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். இதுதொடர்பாக  உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள் ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள்  மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36