கிளிநொச்சியில் அதிகரித்துள்ள சட்டவிரோத மரக் கடத்தல்கள்

Published By: Digital Desk 4

14 Nov, 2019 | 04:10 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மரம் கட்டத்தல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கிளிநொச்சியின் காடுகளில் பெறுமதிமிக்க  மரங்களை சட்டவிரோதமாக வெட்டி அவற்றை மிகவும் நாசுக்காக வாகனங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர் எனவும் இவற்றை சில தரப்புக்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் எனவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியின்  காடுகளில் உள்ள பெறுமதிமிக்க பாலை,முதிரை மரங்கள் இவ்வாறு வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.கடந்த வாரம்  மாத்திரம் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியான சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சியின் மேற்கு பிரதேசங்களான அக்கராயன், ஜெயபுரம், முட்கொம்பன், பூநகரி, வன்னேரிக்குளம் போன்ற பிரதேசங்களின் காடுகளில்  அதிகளவான சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவும் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத மரக் கடத்தல்களி்ல் ஈடுப்பட்டு பிடிபடுகின்றவர்கள் பொலிஸாரினால்  நீதி மன்ற நடடிவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்ற போது அவர்கள் தண்டனையை பெற்றோ அல்லது தண்டப்பணத்தை செலுத்திய பின்னர் மீண்டும் அதே தொழில் ஈடுபடுகின்ற நிலைமையே காணப்படுகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11