மதுபானசாலைகளுக்கு பூட்டு

Published By: Digital Desk 4

14 Nov, 2019 | 01:22 PM
image

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related image

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டே குறித்த இரு நாட்களும் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 

கட்சிகளின் ஆதரவாளர்கள் சிலவேளைகளில் குழப்ப நிலைமைகள் ஏற்படலாம் என்பதையும் அதேபோல் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கக்கூடாது என்ற காரணிகளை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் சகல மதுபான சாலைகளையும் மூட இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

அதேபோல் தற்போது பிரகடனப்படுத்தியுள்ள தேர்தல் அமைதி காலத்தினுள் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகரவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56