ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 284 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்

Published By: Digital Desk 3

14 Nov, 2019 | 01:28 PM
image

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 284 கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் பந்துல ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதுக்கும் மேற்பட்ட சிறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

குறித்த கைதிகள் ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் கொலை, கொள்ளை, பெண்கள் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட 40 முக்கிய குற்றச்சாட்டுகள் தவிர்த்து சிறிய குற்றங்களுடன் மாத்திரம் தொடர்புடைய 284 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்த கைதிகள் குறித்த விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56