யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்!

Published By: Digital Desk 4

13 Nov, 2019 | 02:26 PM
image

ரயில் கடவைக்குக் குறுக்காகச் சென்றதனால் ரயிலுடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்புதமடைத்துள்ளன. 

இன்று காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையிலீடுபட்ட ரயில் யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க முயன்ற வேளையில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.

சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் ஸ்தம்பித்தது. 

 இதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன. 

சம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சிவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர். பொலிசாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04