வகுப்பறையில் ஆசிரியையை நாற்காலியால் தாக்கிய மாணவர்கள்  (காணொளி இணைப்பு)

Published By: Digital Desk 4

13 Nov, 2019 | 02:15 PM
image

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள பாடசாலையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பாடசாலை உள்ளது. அங்கு மம்தாதுபே என்பவர் குழந்தைகள் நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் பாடசாலை வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியை மம்தாதுபேவை சரமாரியாக தாக்கினர்.

அதில் ஒரு மாணவன் நாற்காலியை தூக்கி ஆசிரியை மீது வீசினார். மாணவர்களின் பிடியில் இருந்து மம்தாதுபே தப்பி வெளியே ஓடினார்.

மாணவர்கள் ஆசிரியையை தாக்கியது வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கெமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் மேலாளர் கூறும்போது, ஆசிரியை மம்தாதுபே மாணவர்களை ‘அனாதைகள்’ என திட்டி உள்ளார். அவர் வழக்கமாக மாணவர்களை திட்டிக் கொண்டேதான் இருப்பார். என்றார்.

காந்தி சேவா நிகேதன் மேலாளர் என்னை தாக்குமாறு குழந்தைகளை தூண்டி உள்ளார். அவருக்கும், எனக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது. அவர் தான் மாணவர்களை தூண்டி விட்டுள்ளார்.

பாடசாலை நிர்வாகம் என்னை முன்பு ஒரு முறை பணி நீக்கம் செய்தபோது, கலெக்டர் உதவியுடன் நான் மீண்டும் பணியமர்த்தப்பட்டேன். தற்போது கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் என்னை பணி நீக்கம் செய்ய மேலாளர் முயற்சிக்கிறார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47