இ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ;  வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா

13 Nov, 2019 | 01:22 PM
image

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வுக்கு  ஆத­ரவு வழங்­கு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். வடக்கு மக்கள் சஜித்­துக்கு   முழு­மை­யாக  வாக்­க­ளிப்­பார்கள் என்று அந்த தரப்பு நம்­பு­கின்­றது. ஆனால் மக்கள்  அவர்­களை புறக்­க­ணிப்­பார்கள். தமிழ்க் கூட்­ட­மைப்பு என்ன கூறி­னாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய குறு­கிய நேர செவ்­வி­யி­லேயே  அவர்  இதனை குறிப்­பிட்டார்.  

செவ்வி வரு­மாறு,

பிர­சாரப் பணிகள் எவ்­வாறு அமைந்­தன? உங்கள் வேட்­பா­ளரின் வெற்­றி­வாய்ப்பு எப்­படி இருக்­கின்­றது?

பதில்: எமது வேட்­பா­ள­ருக்­காக பலரும் பல வழி­களில் உழைத்­து­ வ­ரு­கின்­றனர். நான் 24 மணி­நே­ரமும்  பதுளை மாவட்­டத்தில்   கோத்­தாவின் வெற்­றிக்­காக  செயற்­பட்­டு வ­ரு­கின்றேன். என்னை பொறுத்த­வ­ரையில்   பதுளை மாவட்­டத்தில் கோத்­தாவின் வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது.   பதுளை மாவட்டம்  தொடர்பில் வழ­மையாக வித்­தி­யா­ச­மான பார்வை இருக்கும்.  ஆனால் இம்­முறை  பதுளை மாவட்­டத்தில் கோத்­தாவின் வெற்றி  உறுதி என்­ப­தனை  நான் கூறு­கின்றேன்.  

சுதந்­திரக் கட்சி  கோத்­தா­வுக்கு ஆத­ரவு வழங்க எடுத்த தீர்­மானம் மக்­க­ளினால் எவ்­வாறு பார்க்­கப்­ப­டு­கின்­றது?

பதில்: அது­வொரு சிறந்த தீர்­மா­ன­மாகும். அதனை நான் ஆரம்­பத்­தி­லி­ருந்தே வலி­யு­றுத்தி வந்தேன். இது வெற்­றி­க­ர­மாக அமையும்.  அத்­துடன் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வுக்கு  ஆத­ரவு வழங்­கு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். வடக்கு மக்கள் சஜித்­துக்கு   முழு­மை­யாக  வாக்­க­ளிப்­பார்கள் என்று அந்த தரப்பு நம்­பு­கின்­றது. ஆனால் மக்கள்  அவர்­களை புறக்­க­ணிப்­பார்கள். வடக்கில் பலர் தேர்­தலை புறக்­க­ணிக்­கு­மாறு கூறும் அள­வுக்கு நிலைமை மாறி­யுள்­ளது. தமிழ்க் கூட்­ட­மைப்பு என்ன கூறி­னாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆத­ரிக்­க­மாட்­டார்கள்.

கிழக்கின் நிலை?

பதில்: கிழக்கு மாகா­ணத்தில் நான் மூன்று கூட்­டங்­களில் பங்­கேற்றேன்.  அங்கு மக்கள்  ஆளும் கட்சி வேட்­பா­ளரை  ஆத­ரிப்­ப­தாக எனக்கு தெரி­ய­வில்லை.  மிக முக்­கி­ய­மாக கிழக்கில் உள்ள தமிழ் கத்­தோ­லிக்க மக்கள்  கோத்­த­பா­ய­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள்.  

சுதந்­திரக் கட்சி கோத்­தாவை ஆத­ரித்­தாலும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா  சஜித்தை ஆத­ரிக்­கின்­றாரே?

பதில்: அந்த ஆத­ரவு ஒரு சதம் கூட  தாக்­கத்தை  ஏற்­ப­டுத்­தாது என்­ப­தனை தெளிவாக கூறு­கின்றேன்.  

கோத்­த­பாய வேட்­பா­ள­ராக வரு­வதில் ஆரம்­பத்தில் உங்­க­ளுக்கு தயக்கம் இருந்­தது.  இப்­போது உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: கோத்­த­பாய  ராஜ­பக் ஷ சிறந்த ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  வலம் வரு­வதை நான் காண்­கின்றேன்.  அவர்  மிக விரை­வாக தன்னை மாற்­றிக்­கொண்­டுள்ளார்.  நான் கூட ஆரம்­பத்தில் சமல் ராஜ­பக் ஷ வந்தால் சிறந்­த­தாக  இருக்கும் என்று கரு­தினேன்.  ஆனால் கடந்த ஒன்­றரை மாதங்­களில் கோத்­த­பாய ஒரு சிறந்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக செயற்­பட்­டி­ருக்­கின்றார்.  

கோத்­த­பாய ஒரு இரா­ணுவ அதி­கா­ரி­யாக இருந்­தவர். பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்­தவர்.  எனினும்,  அவர் மிக விரை­வாக ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  மாறி­யி­ருக்­கிறார். கடந்த 2010 ஆம்  ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது நாம் இவ்­வா­றான மாற்றம் ஒன்றை காண­வில்லை. அந்தத் தேர்­தலில் ஐ.தே.க. வேட்­பாளர் எவ்­வாறு பேசினார் என்று எல்­லோ­ருக்கும் தெரியும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­பாய  வெற்­றி­பெற்­றதும் ஆறு மாதங்­க­ளுக்குள் பாரா­ளு­மன்றத்  தேர்தல் நடை­பெறும்.  அந்த இடைப்­பட்ட காலத்­துக்குள்  தமிழ் முஸ்லிம்  மக்கள் கோத்­த­பா­யவை நன்­றாக புரிந்­து­கொள்­வார்கள்.   இம்­முறை தேர்­தலில் ஆளும் கட்சி வேட்­பா­ள­ரைப்­போன்று  கோத்­த­பாய  ஆவே­ச­மாக பேச­வில்லை. அவர் தனது திட்­டங்கள் பற்­றியே பேசு­கின்றார்.  

கோத்­த­பாய வென்றால் அர­சியல் தீர்வு கிடைக்­குமா?

பதில்: புதிய  அர­சி­ய­ல­மைப்பு மற்றும்  மாற்­றங்கள் குறித்து கோத்­த­பாய   தனது  கொள்கை பிர­க­ட­னத்தில் பேசி­யி­ருக்­கின்றார். அதா­வது பாரா­ளுமன்­றத்­துக்கு உள்ளே வெளியே  இருக்கும் பிர­தி­நி­திகள் மற்றும் நிபு­ணர்­க­ளைக்­கொண்டு   அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தாக கோத்­த­பாய கூறி­யுள்ளார்.  இத­னையே தான்  கூட்­ட­மைப்பும் கேட்­கி­றது. ஆனால் கூட்­ட­மைப்பு சஜித்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக கூறு­கி­றது.

கூட்­ட­மைப்பு சஜித்­துக்கு  ஆத­ர­வ­ளிப்­பது தொடர்பில்?

பதில்: இம்­முறை தேர்­தலில் கோத்தா வெற்­றி­பெற்ற பின்னர் வடக்கு மக்கள்   தமிழ்க் கூட்­ட­மைப்பை நிரா­க­ரிப்­பார்கள்.  அதன்­பின்னர் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மாற்று கட்சி  ஒன்றை   தமிழ் மக்கள் நாடு­வார்கள்.   அந்த மாற்றுக் கட்சி மித­வாத கட்­சி­யாக இருக்­க­வேண்டும்.

 தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளுக்­காக செயற்­ப­ட­வில்லை. மாறாக  ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கா­கவே செயற்­ப­டு­கி­றது. இது மக்­க­ளுக்கு விளங்­கிக்­கொண்­டு­ வ­ரு­கின்­றது. அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்து போட்­டி­யிட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின்  அர­சியல் எதிர்­காலம்?

பதில்: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சியல் வகி­பாகம்  தொடரும். கோத்­த­பாய ராஜபக் ஷவின் அரசாங்கத்தில்  மைத்திரிபால சிறிசேன அங்கம் வகிப்பார்.

உங்களுடைய எம்.பி. பதவி அவருக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றதே? அப்படி ஏதாவது டீல் பேசப்பட்டுள்ளதா?

பதில்: நான் எந்தவொரு டீல் பேசும் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. ஆனால் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் என்று கருதினால்  அதற்காக சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பேச்சு நடத்தி  ஒரு முடிவுக்கு வந்தால்  எனது இடத்தை அவருக்கு வழங்க   நான் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55