மனித முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ மீன் 

Published By: Digital Desk 4

13 Nov, 2019 | 12:43 PM
image

சீனாவின் யுனான் மாகாணத்தில் பழங்குடியின மக்கள்  பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்துள்ளது. 

அந்த திருவிழா முடிந்த நிலையில், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீர்நிலைகளைப் படம்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது அந்த ஏரியில் நீந்திய மீன் ஒன்று அச்சு அசலாக மனித முகத்தைக் கொண்டுள்ளதை அவர் கவனித்துள்ளார். 

அந்த மீனுக்கு மனிதர்களைப் போன்று வாய், மூக்கு, கண்கள் ஆகியவை இருந்தன. சுமார் 15 விநாடிகள் தலையை உயர்த்தி ஏரியில் நீந்திய மீனை அந்த பெண் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

இந்த காணொளி மற்றும் புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு தைவானில் இதேபோன்ற ஒரு மீன் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right