பெருந்தோட்டத்துறை மக்களும் இந்த நாட்டின் மக்களே - அநுரகுமார திஸாநாயக்க

Published By: R. Kalaichelvan

13 Nov, 2019 | 11:58 AM
image

இலங்­கையின் பெருந்­தோட்­டத்­து­றையில் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்டால் பெருந்­தோட்­டங்­களை நடத்­திச்­செல்­ல­மு­டி­யாது என்று முத­லா­ளிமார் சம்­மே­ளனம் கூறு­வதை ஏற்றுக் ­கொள்­ள­மு­டி­யாது என்று தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க கூறு­கிறார்.

தேயிலை மற்றும் இறப்பர் பெருந்­தோட்­ட ங்களில் இலாபம் கிடைப்­பது அந்த பெருந்­தோட்­டங்­களில் பணி­யாற்றும் தொழி­லா­ளர்­களின் உழைப்பு கார­ண­மா­கவே.

எனினும் இந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆகக்­கு­றைந்த சம்­ப­ளத்­தையே நிறு­வ­னங்கள் வழங்கி வரு­கின்­றன. 1992 இல் செயற்­பட்டு வரும் பெருந்­தோட்­டங்­களில் 400 தொழிற்­சா­லை கள் இருந்­தன. எனினும் உரி­ய­மு­றையில் அந்த பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் செயற்­ப­ட­வில்லை. இந்த நிறு­வ­னங்கள் பெருந்­தோட்டத் தொழில்­து­றையை அபி­வி­ருத்தி செய்­ய­வில்லை.

இதன்­கா­ர­ண­மா­கவே தோட்­டங்கள் நட்­டங்­களை சந்­திக்­கின்­றன. இதற்கு தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் கார­ண­மில்லை. பெருந்­தோட்ட நிறு­வ­னங்­களே கார­ண­மாகும். பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் இலா­பத்தை உழைப்­ப­தற்­காக பெருந்­தோட்­டங்­களின் மரங்­களை வெட்டி விற்­பனை செய்­தன. எனினும் இன்று இலாபம் இல்லை என்று கூறு­கின்­றன.

பெருந்­தோட்­டத் ­தொ­ழி­லா­ளர்­களின் சம்­ப ளம் அவர்கள் வாழ்க்கை செல­வுக்கு ஏற்­பவே தீர்­மா­னிக்­கப்­ப­ட­ வேண்டும். எனினும் பெருந்­தோட்­டத்­து­றையின் நிறு­வ­னங்கள் இலாபம் என்ற விட­யத்­துடன் இணைத்து தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை தீர்­மா­னிக்­க­மு­டி­யாது. இன்று நாட்டில் ஒரு­நா­ளைக்கு உண­வுக்­காக 25,000 ரூபாவை செல­விடும் பிரி­வினர் உள்­ளனர்.

எனினும் இந்த நாட்டில் நாள் ஒன்­றுக்கு தமது உழைப்­புக்­காக 500 ரூபாவை மாத்­தி­ரமே பெறும் பிரி­வினர் அதா­வது பெருந்­தோட்­டத்­து­றை­யினர் உள்­ளனர் என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இந்­த­நி­லையில் பெருந் ­தோட்ட மக்கள் வாழ்க்­கையை 21 நிறு­வ­னங்­க­ளிடம் அட­கு­வைக்­க­வேண்­டுமா?

தேர்தலின்­போது பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் வாக்­கு­களை தசம் கணக்கில் கணக்­கி­டு­வ­தில்லை. ஏனைய வாக்­கா­ளர்­களை போன்றே அவர்­களின் வாக்­கு­களும் எண்­ணப்­ப­டு­கின்­றன. தோட்­டத்­து­றையில் பணி­யாற்றும் தொழி­லா­ளர்­களை ஏனைய மக்­க­ளுக்கு சம­மா­ன­வர்கள் என்ற நிலையில் பார்த்தால் அவர்­களின் சம்­ப­ளப்­பி­ரச்­சி­னையை இல­குவில் தீர்க்­க­மு­டியும்.

நாட்டின் ஏனைய மக்­களை காட்­டிலும் பெருந்­தோட்ட மக்கள் தாழ்ந்­த­நி­லை­யி­லான வாழ்க்­கை­யையே வாழ்­கின்­றனர். 150 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் இலங்­கைக்கு வந்­த­போது பலர் இடை­யி­லேயே உயி­ரி­ழந்­தனர். 100 பேர் இலங்­கைக்கு கப்­பல்­களில் வந்­தார்கள் என்றால் அவர்கள் மலை­நாட்­டுக்கு செல்­லும்­போது 50 பேரா­கவே சென்­றுள்­ளனர். பல்­வேறு கார­ணங்­களால் இவர்கள் இடையில் மர­ணத்தை தழு­வினர்.

சிறிமா-–சாஸ்­திரி உடன்­ப­டிக்­கை­யின்­போது பெருந்­தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் ஏல­ விற்­ப­னையின் அடிப்­ப­டையில் நடத்­தப்­பட்­டனர். இவ்­வ­ளவு தொகையை நீங்கள் வைத்­தி­ருந்தால் நாங்கள் இவ்­வ­ளவு தொகையை வைத்­துக்­கொள்­ளலாம் என்ற அடிப்­ப­டை­யி­லேயே சிறிமா-–சாஸ்­திரி உடன்­ப­டிக்கை செய்­து­கொள்­ளப்­பட்­டது. நாட்டின் வறு­மை­நிலை 4.1ஆக இருக்கும் போது பெருந்­தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வறுமை நிலை 8.8ஆக உள்­ளது.

இதே­வேளை தனி­நபர் வரு­மானம் மாதாந் தம் 16377 ரூபா­வாக உள்­ளது. எனினும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் வரு­மா­னம 8566 ரூபா­வாக உள்­ளது. அர­சாங்­கத்தின் கணக்­கெ­டுப்­பின்­படி 4 பேரைக்­கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 54,599 ரூபா அவ­சி­ய­மாகும். எனினும் பெருந்­தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வரு­மானம் இதனை ஈடு­செய்யும் வகையில் இல்­லாமல் ஆகக்­கு­றைந்த நிலை­யி­லேயே உள்­ளது.

இதனை வைத்து பார்த்தால் அவர்கள் இலங்கை பிர­ஜைகள் இல்­லையா? சுகா­தார நிலையை எடுத்­துக்­கொண்டால் நக­ரங்­களில்  2.5கிலோ­வுக்கு குறைந்த நிறை­கு­றை­வான குழந்­தைகள் 12.7 வீதம் என்ற அளவில் பிறக்­கின்­றன. கிரா­மப்­ப­கு­தியில் இது 15.7 ஆக இந்த நிலை காணப்­ப­டு­கி­றது. ஆனால் மலை­ய­கத்தில் இது 25.6 வீத­மாக உள்­ளது.

இந்­த­ நி­லைமை தொடர்­வதன் கார­ண­மா­கவே மந்­த­போ­சனை நிலை பெருந்­தோட்­டங்­களை பாதிக்­கி­றது. பெருந்­தோட்­டங்­களின் கர்ப்­பிணித் தாய்­மார்­களில் மூன்றில் ஒரு­வ­ருக்கு உரிய இரத்தம் இல்­லாமல் உள்­ளது.

கல்­வித்­து­றையில் பெருந்­தோட்­டத்­து­றை யில் சாதா­ர­ண த­ரத்­துக்கு கீழ் கல்வி பயின்­ற­வர்­களின் வீதம் 47 ஆக உள்­ளது. 8 வீத­மா­னோரே உயர்­தரம் கற்­கின்­றனர். பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு 2 வீத­மா­னோரே செல்­கின்­றனர். நாட்டில் உள்ள 14 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு 28700 மாண­வர்கள் வரை அனு­மதி பெறு­கின்­ற­போதும் பெருந்­தோட்­டங்­களின் 150 என்ற அள­வி­லான மாண­வர்­களே பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெறு­கின்­றனர். அதிலும் 20 -பேரே கணிதம் மற்றும் விஞ்­ஞா­னத்­து­றையில் பல்­க­லைக்­க­ழ­கங்களுக்கு செல்­கின்­றனர். இரத்­தி­ன­புரி மற்றும் பதுளைப் பகு­தி­களில் கணிதம் மற்றும் விஞ்­ஞா­னப்­பா­ட­சா­லைகள் இல்லை. இது பாரிய பாதிப்­பாகும். இலங்­கையில் கண­னி­களை வைத்­தி­ருப்­ப­வர்­களின் எண்­ணிக்கை வீதம் 22.8ஆக உள்­ளது.

எனினும் பெருந்­தோட்­டத்­து­றையில் 4.5 வீத­மா­னோரே கண­னி­களை கொண்­டுள்­ளனர். பெருந்­தோட்­டத்­து­றையில் ஐந்து வய­துக்கு உட்­பட்­ட­வர்­களில் நூற்­றுக்கு ஐந்து வீத­மானோர் மந்­த­போ­ச­னைக்கு உட்­பட்­டுள்­ளனர். கட்­டு­நா­யக்­கவில் உள்ள ஆடைத்­தொ­ழிற்­சா­லை­களில் பணி­யாற்­று­கின்ற பெருந்­தோட்ட இளை­ஞர்­க­ளுக்கு, யுவ­தி­க­ளுக்கு கிடைத்­துள்ள தங்­குமி­டங்­களை காட்­டிலும் குறைந்த அள­வைக்­கொண்ட வீடு­களே பெருந்­தோட்­டங்­களில் உள்­ளன.

இதனை அந்த தொழிற்­சா­லையில் பணி ­யாற்­று­கின்ற பெருந்­தோட்ட இளைஞர்­களே தம்­மிடம் கூறி­ய­தாக அனு­ர­கு­மார திஸாநாய க்க குறிப்­பிட்­டுள்ளார். இன்று பெருந்தோ ட்ட மக்­களை பொறுத்­த­வ­ரையில் சமூக அந்தஸ்து குறைந்தளவிலேயே உள்ளது. வீடுகளில் பணியாற்றுவதற்கும் ஹோட்டல் களில் பணியாற்றுவதற்கும் இன்று பெருந் தோட்டங்களில் உள்ளவர்களே தேடும் நிலை உள்ளது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுபான விற்பனைகளில் ஈடுபடுகின்றனர். பெருந் தோட்ட பணியாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவாக இருக்கவேண்டும்.

இதனை தொழிலாளர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டும்.அத்துடன் அவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனை த்து உரிமை விடயங்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகள் உரியமுறையில் செயற்பட்டு அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09