( பிரதாப் )

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான லெப்டினன் கேர்ணல் பிரபோத சிறிவர்தன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

20 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 60 இலட்சம் ரூபா இரு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நபர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராக வேண்டுமென ஹோமாகம நீதிவான் உத்தரவிட்டுள்ளதோடு அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட வழக்கு தொடர்பில் ஏற்கனவே ஒன்பது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு ஹோமாகம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.