காட்டுதீயை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 வார கர்ப்பிணிப்பெண்- பின்வாங்கமாட்டேன் என தெரிவிப்பு

13 Nov, 2019 | 11:24 AM
image

அவுஸ்திரேலியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 வார கர்ப்பிணிப்பெண் தனது முயற்சியை கைவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சமீபத்தில்மூண்டுள்ள காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள கட் ரொபி;ன்சன் வில்லியம்ஸ் என்ற  14 வார கர்ப்பிணிப்பெண்  அவுஸ்திரேலியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கர்ப்பிணியான தான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறித்து நண்பர்களும் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் ஒதுங்கிநிற்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நான் கடந்த 11 வருடங்களாக நியுசவுத்வேல்சின் கிராமிய தீயணைப்பு படையில் தொண்டராக பணியாற்றிவருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தீயணைக்கும் பிரிவில் பணியாற்றும் முதல் கர்ப்பிணிப்பெண் நானில்லை  அதேபோன்று நானே இறுதிபெண்ணாகவும் இருக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுதீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தான் தயாராகும் புகைப்படங்களையும் ரொபின்சன்வில்லியம்ஸ்  சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

ஆம் நான் ஒரு தீயணைப்புவீராங்கனை, நான் ஆணில்லை, ஆம் நான் கர்ப்பிணி  உங்களிற்கு  இது பிடிக்காவிட்டால் பரவாயில்லை என அவர் பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவிற்கு பலத்தஆதரவு வெளியாகியுள்ளது- அவர் இளம் பெண்களிற்கு முன்னுதாரணமாக விளங்குகின்றார் என பலர்தெரிவித்துள்ளனர்.

தனது நண்பர்கள் பலர் கர்ப்பிணியான தான்இந்த நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்த பின்னரே தனது படத்தை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நான் நன்றாகயிருக்கின்றேன் நான் இதனை நிறுத்தப்போவதில்லை என அவர்களிற்கு தெரிவிக்கப்போகின்றேன் நிறுத்து என எனது உடல் தெரிவிக்கும்போதே எனது பணியை நிறுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.

தனது குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

1995 இல் காட்டுதீ மூண்டவேளை எனது தாயும் கர்ப்பிணியாக காணப்பட்டார் .இது எங்கள்இரத்தத்தில் ஓடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது குடும்பத்தை சேர்ந்த பலர் தீயணைப்பு பணிகளில் தொண்டர்களாக உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது தாயாரும் அவரின் தாயாரும்,எனது கணவரும் இதில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர் எனது பிள்ளையும் இதனை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணியாக காட்டுதீயுடன் போராடுவது உங்களிற்கு அச்சத்தை ஏற்படுத்தியதா  என்ற கேள்விக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17