கூட்டணியின் கோரிக்கைகளுக்கு பிரதமர் ரணில் இணக்கம் ; அரசியல் தீர்வு விடயத்திலும் உறுதி

13 Nov, 2019 | 10:40 AM
image

தமிழர் விடுதலைக் கூட்டணி யினால் முன்வைக்கப்பட்ட 11 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பான்மையான விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்தது. இதற்கிணங்க இந்த யோசனைகள் தொடர்பில் கூட்டணியின் தூதுக்குழு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்திது கலந்துரையாடியது.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அரவிந்தன், நிர்வாக செயலாளர் சங்கையா மற்றும் ஐங்கரன் ஆகியோர் நேற்று நண்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து 11  அம்ச திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். இதில் இனப்பிரச்சினைக்கு இந்திய முறைமையிலான தீர்வுகாணப்பட வேண்டும் என்ற கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வை காண்பது தொடர்பிலேயே ஆராய்ந்து வருவதாகவும் அதனடிப்படையில் தீர்வுகாண்பதே சிறந்தது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சகல தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வுகாணப்படும் என்று தெரிவித்த பிரதமர் கூட்டணியின் ஏனைய கோரிக்கைளை நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கத்தை தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை கூட்டணியின் இந்தத் தூதுக்குழுவினர் நேற்று முற்பகல் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவையும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவையும் சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இச்சந்திப்பையடுத்து மட்டகளப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இதன்போது   தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கணபதிப்பிள்ளை யோகராஜா   குறிப்பிடுகையில்

எமது கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அண்மையில் வவுனியாவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பெரும்பான்மையானோர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவிற்கே ஆதரவு வழங்கவேண்டும் என்று தெரிவித்தனர். சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஆற்றல்கொண்ட சஜித் பிரேமதாஸவையே ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார். 

 (நா.தனுஜா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44