எமது வெற்றிக்கு அனைத்து இன மக்களின் ஆதரவும் அவசியம் - பஷில் 

Published By: Vishnu

12 Nov, 2019 | 06:49 PM
image

சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் சிறந்த முறையில்  வாழ்வதற்கான சூழலை மீண்டும் தோற்றுவிப்போம்.  மக்கள் மத்தியில் காணப்பட்ட ஒருமைப்பாட்டை அரசாங்கம் அரசியல் தேவைகளுக்காக  இல்லாதொழித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனைத்து இன மக்களின் ஆதரவும் அவசியம் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை கொண்டுள்ளார்கள். இப் பிரதேச மக்கள் பெரிதும் பின்தங்கிய  நிலையில் உள்ளார்கள். விவசாயத்தை பிரதான் ஜீவனோபாயமாக கொண்டுள்ளவர்களுக்கு  காட்டு யானைகளின் தாக்குதல்  பாரிய நெருக்கடியினை  ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுப்படும் மக்களின்  வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்  பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை  பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  நுண்கடன்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தீர்வு வழங்கப்பட்டு அவர்கள் சுய கைத்தொழில் ஊடாக முன்னேற்றமடைவதற்கான  திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் செயற்படுத்தப்படும்.

கடந்த அரசாங்கத்தில் இப்பிரதேசத்தில் பல செயற்திட்டங்களின் ஊடாக  பல   அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.துரிதகரமான  அபிவிருத்தியையும், முன்னேற்றத்தினையும் கருத்திற் கொண்டு 2015ம் ஆண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தினை  ஏற்படுத்தினார்கள். ஆனால்  எவரின் எதிர்பார்ப்பும் ஈடேறவில்லை. கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்திகள் அரசியல்  பழிவாங்களுக்காக முடக்கப்பட்டதே தவிர எவ்வித புதிய அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அனைத்து  இன மக்களும் இலங்கையர் என்ற அடையாளத்துடன்  சிறந்த  முறையில்  வாழ்வதற்கான சூழலை எமது அரசாங்கத்தினால் மாத்திரமே  ஏற்படுத்த முடியும்.   பலப்படுத்தப்பட்ட  தேசிய  பாதுகாப்பு, மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. சகல இனத்தவர்களும் கௌரவமாக வாழும் சூழலை மீண்டும் பெற்றுக் கொடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44