ராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.

Published By: Digital Desk 4

11 Nov, 2019 | 09:18 PM
image

 இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்தது தனி சிங்களவாதம் இல்லாத மஹிந்த குடும்பம் வரவேண்டும் அப்படி வந்திருந்தால் அவர்களுடைய வெற்றி வாய்ப்பு இக்காலகட்டத்தில் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இத் தேர்தலில் அவர்களுக்கு ஒரு படிப்பினையை நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது வெறுமனே தனியாக சிங்கள ஆதிக்கத்தை மாத்திரம் மையப்படுத்திய தேர்தலுக்கு இந்த நாட்டில் இருக்கின்ற தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

அத்தோடு இந்த நாட்டில் கிட்டத்தட்ட நாற்பது வீதமான சிங்களவர்கள் அவர்களோடு இல்லை. நல்லவர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். முஸ்லிம்களும் தமிழர்களும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைப்பட்டு ஒரு அணியில் இருக்கின்றார்கள். சிங்கள சமூகம் மூன்று பிழவாக இருந்து கொண்டிருக்கிறது. கோத்தா அணியிலுருந்த அதிகமானோர் தற்போது சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தொடங்கி விட்டார்கள்.

எனவே சஜித்துக்கு முப்பத்தியெட்டு வீதத்தை தாண்டினால் போதும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இப்போது நாற்பது வீதத்தை தாண்டியுள்ளது.

இதில் இனவாதத்தைப் பேசுகின்ற ஒருசிலர் அரசியல் தேவைக்காக, அவர்களுடைய அரசியல் வாழ வேண்டும் என்பதற்காக அந்த அணியில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

எனவே இவர்கள் எல்லோருக்கும் ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டிதான் நாங்கள் இந்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22