12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் 

Published By: Digital Desk 4

11 Nov, 2019 | 07:30 PM
image

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். 

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 

கடந்த ஆட்சியில் 12 போராளிகள் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர். 

இந்த நிலையில் மொட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார். மொட்டுக்கு வாக்களியுங்கள். ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் விமர்சனங்களை முன் வைத்த அவர், எந்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்னத்திற்கு தமது ஆதரவினை வழங்கியது எனவும் வினாவெழுப்பினார். 

எம்மைப் பொறுத்தவரையில் இரு அரசியல் தலைவைர்களும் தராசு போன்றவர்கள். யார் வந்தாலும் எமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02