மௌனமான மாரடைப்பு...! எச்சரிக்கை தேவை

Published By: Digital Desk 4

11 Nov, 2019 | 05:44 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதில் 40 சதவீதத்தினர் மௌனமான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

மௌனமான மாரடைப்பா...!

எம்மில் பலருக்கு நெஞ்சில் ஓர் அழுத்தம், வயிறு உப்புசம், அதிக வியர்வை, குமட்டல் அல்லது குமட்டல் உணர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் இயல்பாக ஏற்படும். இத்தகைய அறிகுறிகளை எம்மில் பலரும் அலட்சியப்படுத்தி, புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால் இதுதான் மௌனமான மாரடைப்புக்கு அறிகுறி என்று இதய நோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய அறிகுறி ஏற்படும் தருணத்தில் ஈசிஜி, எக்கோகார்டியோகிராம் போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டால், இதய தசைகளின் செயலிழப்பு அல்லது இதய தசைகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் கண்டறிந்து தெரிவிப்பார்கள். பிறகு அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் இத்தகைய மௌனமான மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

இத்தகைய பாதிப்பு ரத்த அழுத்தத்தின் காரணமாகவே ஏற்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா...! ரத்த அழுத்தத்தை உடனடியாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், நாளடைவில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்த குழாய் சுருக்கம் அல்லது அடைப்பு ஏற்படும். இதன் காரணமாக இதயத் தசைகளுக்கு கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் கிடைக்காமலும், இதயம் இயங்குவதற்கான பணிகள் தடைபடுகின்றன. இவை ஒரே நாளில் திடீரென்று ஏற்படுவதில்லை. பல மாதங்களாக அல்லது சிலருக்கு சில ஆண்டுகளாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு, இறுதியில் மௌனமான மாரடைப்பு ஏற்படுகிறது.

மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியவுடன் எக்கோ கார்டியோகிராம் என்ற பரிசோதனைகளை மேற்கொண்டு, அவற்றை இதய நோய் சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து, உங்களின் இதயத்தின் செயல்பாட்டையும், இதய தசைகளின் செயல்பாட்டையும், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் மற்றும் இரத்த ஓட்டத்தின் செயல்பாட்டையும் துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும் உறுதியாக பின்பற்ற வேண்டும். இதனை மேற்கொண்டால் மௌனமான மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். 

டொக்டர் துர்கா தேவி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29