இராணுவத்தினர் முன் மஹிந்த - கோத்தாபய மண்டியிட்டு மன்னிப்புக்கோர வேண்டும் - சம்பிக்க 

Published By: Vishnu

11 Nov, 2019 | 05:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இராணுவ  தலைமையகத்திற்கு சொந்தமான  காணியை  விற்று அதிலும்  தேசிய நிதியை கொள்ளையடித்து  இராணுவத்தினையே  கேள்விக்குறியாக்கிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தார் இராணுவத்தினர், நாட்டு மக்கள் முன்னிலையிலும் மண்டியிட்டு மன்னிப்புகோர வேண்டும் என பாட்டலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின்  ஊழல் மோசடிகள் தொடர்பில்  கருத்துரைக்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மற்றும் அவரது  சகாக்கல்  அதனை  போலி குற்றச்சாட்டுக்கள் ,அரசியல் பழிவாங்கல் என்றும் குறிப்பிட்டு  வழமையாக தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்விதமான முறையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.  

இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணி  சீனாவிற்கு விற்கப்பட்டமை  ஊடக  தேசிய நிதி 5 பில்லியன் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டினை  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மறுக்க முடியுமா.

நல்லாட்சி அரசாங்கத்திலும் தேசிய நிதி மத்திய  வங்கியின் பினைமுறி கொடுக்கல்  வாங்கல் ஊடாக இடம் பெற்றுள்ளது  என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை.  கடந்த அரசாங்கம் போல  மூடி மறைக்கவும் இல்லை.   அரசாங்கம்  அரச  காணிகளை   சர்வதேச  நிறுவனங்களுக்கு  வழங்குவதாக  எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.  

கடந்த  நான்கரை வருட காலமாக  ஒரு அங்குல  காணியை  கூட  வெளிநாட்டு   நிறுவனங்களுக்கு  விற்கவில்லை.  ஒப்பந்த அடிப்படையிலே  காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.   நாட்டு மக்கள் எதிர் தரப்பினரது போலியான பிரச்சாரத்திற்கு  ஏமாற்றமடையாமல்  அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க  வேண்டும்.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்  சகாக்கல் கருத்துரைப்பது  எவ்விதத்திலும் பொறுத்தமற்றது. 

ஆகவே அவரே மறுப்புக்களை தெரிப்பதாயின்  நேரடியாக  விவாதத்தினை முன்னெடுக்க  வேண்டும். ஆதாரங்களுக்கான ஆவணங்களை பகிரங்கப்படுத்த தயார் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39