டெங்கு நோயைத் தடுக்கும் டக்கேட்டா தடுப்பூசி

11 Nov, 2019 | 04:10 PM
image

டெங்கு நோயைத் தடுக்கும் வகையில் டக்கேட்டாவினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வந்த டெட்ராவெலன்ட் நோய் எதிர்ப்பு டெங்கு தடுப்பு சோதனையின் ஆரம்பகட்ட செயற்பாட்டின் இறுதிப் பகுப்பாய்வின் 3ஆவது கட்டத்தின் முடிவுகள்  நியூ இங்கிலன்ட் ஜேர்னல் ஒப் மெடிசின் (New England Journal Of Medicine ) என்ற சஞ்சிகை இணையத்தளம் வாயிலாக செய்தி வெளியிட்டுள்ளது. 

4 வயதிலிருந்து 16 வயது வரையான குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையினால் டெங்கு நோயினால் (வைரோலொஜி – உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு) - VCD பாதுகாக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருத்தல் அல்லது பாதிக்கப்படாமலிருத்தல் தொடர்பாக இந்த சோதனையின் போது கருத்திற்கொள்ளப்படவில்லை.

நுளம்பிலிருந்து மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் நோய்களில் டெங்கு நோயும் ஒன்றாகும். 

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய 2019ஆம் ஆண்டு உலகளாவிய சுகாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கியமான 10 சவால்களில் டெங்கு நோயும் ஒன்றாகும். 

உலகில் ஏறக்குறைய பாதி பேருக்கும் அதிகமானோர் டெங்கு நோய் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 390 மில்லியன் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்படுவதோடு, அவர்களில் 20000 பேர் இறக்கின்றனர்.

குறித்த ஆயிவின் பின்னர், டக்கேட்டா டெங்கு தடுப்பூசி சோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி இருப்பதோடு, அவர்களுக்கு எவ்வித அபாய அறிகுறிகளும் தென்படவில்லை.

இரண்டாவது மாத்திரையின் பின்னர் 12 மாதகாலத்திற்குள் தடுப்பூசியின் செயற்பாடுகள் (VE) 80.2%ஆக காணப்பட்டதோடு அது முதல் மாத்திரை வழங்கப்பட்டு மூன்று மாதங்களில் பின்னர் வழங்கப்பட்டதாகும்.

பரிசோதனையின் இரண்டாம் கட்ட முடிவு பகுப்பாய்வின் போது, இதற்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிகப்பட்ட மற்றும் பாதிக்கப்படாதவர்களுக்கும் அதேபோன்ற பாதுகாப்பு கிட்டுமென தெரிவிக்கப்படுகிறது. (முறையே VE: 82.2%, VE: 74.9%)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04