எமது கேள்­வி­க­ளுக்கு பதில் தாருங்கள் ; கோத்தா தரப்­பிடம் அஜித் பி. பெரேரா கோரிக்கை

11 Nov, 2019 | 11:03 AM
image

(எம்.மனோ­சித்ரா)

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தபாய ராஜ­ப­க்ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்­கப்­பட்­டி­ருப்­பது உண்­மை­யானால் அவர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ஏற்­பாடு செய்­தி­ருந்த விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது ஏன் அது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ ஆவ­ணத்தை வெளிப்­ப­டுத்­த­வில்லை என்று அமைச்சர் அஜித் பி பெரேரா கேள்­வி­யெ­ழுப்­பினார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பிய அமைச்சர் மேலும் தெரி­வித்­ததா­வது, கோத்­த­பாய அமெ­ரிக்க பிரஜை அல்ல என்­பதை கூறு­வ­தற்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்ரி ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டை நடத்­து­கின்றார். இவ்­வாறு பிரத்­தி­யேக சட்­டத்­த­ர­ணி­யையும், கட்சி பிர­தி­நி­தி­க­ளையும், பேச்­சா­ளர்­க­ளையும் தூது அனுப்­பு­வதன் மூலம் தான் அமெ­ரிக்க பிரஜை அல்ல என்று கூற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. உண்­மையில் கோத்த­பா­யவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்­கப்­பட்­டி­ருந்தால் அவரே நேர­டி­யாக உண்­மை­யான ஆதா­ரத்தை வெளிப்­ப­டுத்­து­வதன் மூலம் அதனை அறி­விக்க முடியும்.

ஆனால் அவர் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் அதனை செய்­ய­வில்லை. கோத்­தப­ாய­வுக்­காக ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டை நடத்தும் சட்­டத்­த­ரணி அலி சப்­ரி­யிடம் சில கேள்­வி­க­ளுக்கு பதிலை எதிர்­பார்க்­கின்றோம்.

'கோத்தபாய ராஜ­பக் ஷ இரட்டை குடி­யு­ரி­மையை பெற்றுக்கொண்டால் அதன் போது சமர்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பத்தின் இலக்கம் என்ன?, அதற்­காக எப்­போது கட்­டணம் செலுத்­தப்­பட்­டது?, கட்­ட ணம் செலுத்­தி­ய­மை­க்கான பற்­றுச்­சீட்டை வெளிப்­ப­டுத்த முடி­யுமா?, சமர்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பத்தின் உண்மை தன்மை இலங்கை குடி­வ­ரவு - குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதா?, குறித்த தினத்தில் வழ ங்­கப்­பட்ட ஏனைய விண்­ணப்­பங்கள் அனைத்தும் குடி­வ­ரவு -குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தில் இருக்கும் போது,  கோத்தபா­ய வின் ஆவ­ணங்கள் மாத்­திரம் எவ்­வாறு காணாமல் போனது?  என்ற கேள்­வி­க­ளுக்கு அலி­சப்ரி பதி­ல­ளிக்க வேண்டும். இல்­லை­யென்றால் இவர்கள் மக்­களை ஏமாற்­று­கின்­றனர் என்­பதே அர்த்­த­மாகும்.

எனவே இவ்­வி­டயம் தொடர்பில் நாட்டு மக்கள் விழிப்­ப­டைய வேண்டும். எவ் ­வா­றி­ருப்­பினும் கோத்­தபாய ராஜ­பக் ஷ அமெ­ரிக்க பிர­ஜை­யா­னாலும் சரி, இல்­லை­யென்­றாலும் சரி நிச்­சயம் அவர் தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­ப­டுவார். புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவால் இல­கு­வாக தோல்வியடைச் செய் யக் கூடியவர் கோத்தபாயவே ஆவார். எனவே அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமதும் சஜித்தினதும் ஆசையாகும். எனவே தான் கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் நாம் எமது தேர்தல் பிரசார கூட்டங்களில் கருத்துக்களை வெளியிடுவதில்லை என் றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09