பரா மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் தினேஷ் பிரியந்த!

Published By: Vishnu

11 Nov, 2019 | 09:48 AM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் 07 ஆம் திகதி ஆரம்பமாகிய 9 ஆவது உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கையின் நட்சத்திர பரா மெய்வல்லுனரான தினேஷ் பிரியந்த ஹேரத் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான தினேஷ் பிரயந்த ஹேரத், 2018 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த போட்டித் தொடரானது, ஜப்பானில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளது. 

இதன்படி, டுபாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக பரா மெய்வல்லுனரில் 118 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1400 பரா மெய்வல்லுனர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், இலங்கையிலிருந்து ஒன்பது வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் போட்டிகளின் நான்காவது நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான எப்-46 பிரிவு ஈட்டி எறிதல் பங்குகொண்ட தினேஷ் ப்ரியந்த 60.59 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09