தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின்  தன்னை தெரிவு செய்த கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட  மு.க.ஸ்டாலின், தன்னை சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்த கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு வீதி வீதியாக சென்று நேரில் நன்றி தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மு.க.ஸ்டாலினுக்கு ஆராவார வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் அவருக்கு கை குலுக்கியும், சால்வை அணிவித்தும், மலர் மாலைகள் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இளைஞர்கள், மாணவ, மாணவியர் உட்பட ஏராளமானோர் அவருடன் ஆர்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதனிடையே இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி மற்றும் ஏனைய கட்சித்தலைவர்களும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் வாக்காளர்களுக்கு நேரில் செல்லாமல் பதாகைகள் மூலம் நன்றி தெரிவித்து வருவது வாக்காளர்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

தகவல் : சென்னை தகவல்