நிபந்தனையின்றி ஆதரவளித்தமையால் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன?- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் சம்பந்தனுக்கு கடிதம்

Published By: Digital Desk 4

10 Nov, 2019 | 02:32 PM
image

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவுகளை வழங்குவதால் தமிழ் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன என்பதை கூட்டமைப்பின் தலைமையுள்ளிட்டவர்கள் வெளிப்படுத்த முடியுமா என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அவ்வியகத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நடைபெறவுள்ள  சனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் 2015ஆம் ஆண்டும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன?  கடந்த நான்கரை ஆண்டு காலம் அரசாங்கத்தை தாங்கிப்பிடித்தீர்கள் அதனால் தமிழ்மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டியதா? 

தமிழ் மக்களை எத்தனை தடவை ஏமாற்றிவிட்டீர்கள். உங்கள் வயதிற்கும், அறிவிற்கும். அனுபவத்திற்கும் நீங்கள் கூறிய வாசகங்கள் பொங்கலுக்கு தீர்வு, அடுத்த தீபாவளிக்குள் தீர்வு, ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி, இதோ நல்ல செய்தி வருகிறது மைத்திரியை மண்டேலா, காந்தி என்றும் தமிழ் மக்களுக்கு தீர்வு வந்து விட்டது போலும் 2015ஆம் ஆண்டில் இருந்து அண்டப்புழுகு, ஆகாசப்புழுகுகள் கூறி ஏமாற்றினீர்கள்.

மூன்று தடவை நம்பிக்கை இல்லாப் பிரேனையில் இருந்து அரசை பாதுகாத்தீர்கள் இதன் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன ? சில இடங்களில் காணி விடுவிக்கப்பட்டதைத் தவிர அவைவும் முழுமை அல்லவே எதுவித முன்னேற்ற கரமான விடயங்களும் நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பல்லயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை, புதிய அரசியல் அமைப்பு முயற்சி முற்றுப் பெறாது என்று ஏலவே தெரிந்த விடயம் இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு எதுவித முனைவும் மேற்கொள்ளவில்லை.

மாறாக கூட்டமைப்பினர்தான் பதவி அனுபவத்தீர்கள் எதிர்கட்சித் தலைவர்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உத்தியோக பற்றற்ற அமைச்சர் இந் அரசுடன் ஐக்கிய உறவாக இருந்தீர்கள்.

தமிழ்த் தேசியத்திற்கு பெரும் துரோகம் செய்த டக்ளஸ் தேவானந்த கடந்த காலத்தில் செய்த பிற்போக்குத்தனமான விடயங்களையே நீங்களும் மேற்கொண்டு மென் சக்தி நகர்வில் தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டீர்கள் சிங்கள கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்கும் மனநிலையை ஏற்படுத்தியது நீங்கள் தான்.

தமிழ்த்தேசிய வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது. இந்த நூற்றான்டின் நன்கு திட்டமிட்ட இன படுகொலையும் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன ஒவ்வொரு தமிழன் உயிரும் எதற்காக இந்த மண்ணில் மடிந்தது என்பது கூட உங்களுக்குத் தெரியாதா நிபந்தனை அற்று சிங்களவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வல்லான்மை இல்லாத வழிப்போக்கன் இனம் இல்லை விடுதலைக்காக போராடிய வீறு கொண்டு எழுந்த இனம் நீங்கள் பன்நாட்டுத் துரதரகங்களின் அனுசரனையுடன் நிபந்தனையின் அடிப்படையில் ஆதரித்திருக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு கால நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் மனச்சாட்சிகளைத் தொட்டு சொல்லுங்கள் டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் இன்றைய மைத்திரிபால சிறிசேன வரை தமிழ்மக்களுக்கு விசுவாசமாக நேசகரம் நீட்டிய தலைவர்கள் உண்டா? காலத்திற்கு காலம் எல்லாத் தலைவர்களும் ஏமாற்றினார்கள். என்னும் வரலாறு தாங்கள் அறியாமல் இல்லை இழப்பதற்கு எதுவும் இல்லாத அளவிற்கு எஞ்சிய உயிரை தவிர எதுவும் இல்லாத ஏதிலி தமிழர்களுக்கு தலைமை தாங்கும் தார்மீக தகுதியை இழந்துவிட்டிர்கள்.

நீங்கள் நினைத்திருந்தால் ஒவ்வொரு தடவையும் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் போது பல அன்றாட பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம் குறைந்த பட்சம் கல்முனை பிரதேச செயலக விடயம் கூட கைகூடவில்லை அரசாங்கத்தின் இதயத்தில் இருக்கிறோம். புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முடியவில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்றார் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  செய்தீர்களா?

ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்ற படி ஏறியது போல்  காணாமல் ஆக்கப்படடோருக்கும் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் நீதிமன்றப் படி ஏறி இருக்கலாமே கம்பரலியாவில் காட்டிய வேகம் தமிழ் மக்கள் நலனில் காட்டவில்லை. உங்கள் அரசியல் சித்தாந்தம் தோற்றுவிட்டது தமிழ்மக்களின் கூட்டுத்தலைமையை ஏற்கும் தகுதியை இழந்து விட்டிர்கள். உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் தமது வழி வரைபட சித்தாந்தம் தோற்றுவிட்டால் விலகி வழி விடுவதே உண்மையான சனநாயக பிரதிநிதித்துவ அரசியல் முறைமை.

ஆகவே மேலும் தமிழ் மக்களை ஏமாற்றாமல் ஓய்வெடுத்துக் கொள்ளளுங்கள் “காற்று இடைவெளியை நிரப்பும் தேசம் தன் தலைமையை தீர்மானிக்கும்” இனப்படுகொலை செய்த கோத்தபாய வந்தால் என்ன? இதுவரை கோட்பாடுகள் இன்றி தூர நோக்கு இன்றி பேசும் சஜித் பிரேமதாச வந்தால் என்ன? எதுவும் நடக்கப்போவது இல்லை தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ஒரு சட்ட ஆவணம் இல்லை அதை நிறைவேற்றவேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. 

கூட்டமைப்பே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒரு போதும் பின் பற்றுவதில்லை பெரும்பான்மையான தமிழ் மக்கள் இனியும் உங்களை நம்பமாட்டார்கள். பல இயக்கங்கள், கட்சிகள் வந்தபோதும் புலிகளை மட்டும் ஏன் தமிழ் மக்கள் விசுவசித்தார்கள். அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. 

தமிழரசுக் கட்சி தலைமை என்பது ஆளுமை இல்லாத வெறும் இறப்பர் முத்திரை தான். பல்கலைகழக மாணவர்களையும் போலி ஒப்பந்தம் செய்து ஏமாற்றினீர்கள். கூட்டமைப்பின் ஏமாற்று நாடகத்திற்கு ஆமா சாமி போடும் பங்காளிக் கட்சித்தலைவர்களும், கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் தூர நோக்கை இலக்காக கொணடு இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள் என வேண்டுகை விடுக்கின்றோம் என்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04