உலகின் முன்னணி அதிவேக சேவை மற்றும் சரக்கியல் வழங்குநரான DHL நிறுவனம், பாடசாலை றக்பி விளையாட்டு வீரரான ஹர்ஷ சமரசிங்கவின் கனவுப் பயணத்தை நிறைவேற்றியுள்ளது. 

இதற்கமைய, லண்டன் நகரில் இடம்பெற்ற 2015ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் உத்தியோகபூர்வ பந்தினை கையளித்து றக்பி வரலாற்றில் இடம்பிடித்த ஒரேயொரு இலங்கையர் எனும் பெருமையை ஷர்ஷ சமரசிங்க பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் உத்தியோகப்பூர்வ சரக்கியல் பங்காளரான DHL Express நிறுவனம் மற்றும் இலங்கை றக்பி கால்பந்தாட்ட சங்கம்  (SLRFU)ஆகியன இணைந்து றக்பி உலக்கிண்ண போட்டியில் உத்தியோகபூர்வ விளையாட்டு பந்தினை கையளிப்பதற்கான வாய்ப்பை 8 முதல் 15 வயதுக்குட்பட்ட இளம் றக்பி வீரர்களுக்கு வழங்கியிருந்தது.

இந்தப் போட்டி மிகப் பிரபல்யம் அடைந்துள்ளதுடன், நாடுமுழுவதுமிருந்து ‘A’ பிரிவு பாடசாலைகளிலிருந்து 36 பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. முதலில் 80 பாடசாலை மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இறுதி போட்டியாளர்களுக்கு றக்பி களியாட்டத்தில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

ஒன்லைன் மற்றும் SMS வாக்குப்பதிவினூடாக வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். வெவ்வேறு கட்டங்களில் பெற்றுக்கொண்ட ஒட்டுமொத்த அதியுயர் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவான மாணவர், ‘Match Ball Delivery’ செயற்திட்டத்தின் ஓர் அங்கமான 2015 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்.

DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரேரா கருத்து தெரிவிக்கையில், 

‘2015ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டிகளில் முதலாவது உத்தியோகப்பூர்வ பந்தினை கையளிப்பதற்கான வாய்ப்பு இலங்கை மாணவரான ஹர்ஷவிற்கு கிடைத்தமை அற்புதமான விடயமாகும். இந்த வாய்ப்பினை வழங்குவதனூடாக ஹர்ஷவின் வாழ்வில் சாதகமான பங்களிப்பை ஏற்படுத்த முடிந்துள்ளமை குறித்து DHL நிறுவனம் மிகவும் பெருமையடைகின்றது” என்றார்.

கண்டி திரித்துவக் கல்லூரியின் மாணவரும், றக்பி வீரருமான ஹர்ஷவிற்கு சிறுவயது முதலே றக்பி வீரராக வேண்டுமென்பதே கனவாக இருந்தது. 

உலகம் முழுவதும் இருந்து 27,000 பார்வையாளர்கள் கூடியிருந்த லீசெஸ்டர் சிட்டி மைதானத்திலிருந்து பந்தை கையளித்து பெருமிதத்துடன் வெளியேறியமையானது தன் கனவு நனவானதிற்கு ஒப்பானது என அவர் குறிப்பிட்டிருந்தார். ‘எனது வாழ்நாளின் மிகப்பெரிய தருணமாக இதுவுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள பிரமாண்டமான றக்பி ரசிகர்கள் பார்வையிட உத்தியோகபூர்வ பந்தினை நான் கையளித்தமை விலைமதிக்கமுடியாததாகும்” என்றார்.

லீசெஸ்டர் சிட்டி மைதானத்தில் கனடா மற்றும் ரொமேனியாவிற்கிடையே நடைபெற்ற குழு மட்ட போட்டியில் முதலாவது உத்தியோகப்பூர்வ பந்தினை கையளிப்பதற்கு மேலதிகமாக, தனது தந்தையுடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட RWC 2015 போட்டியில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பும் ஹர்ஷவிற்கு கிடைத்திருந்தது. 

இந்த பரிசு தொகுப்பில் லண்டனிலிருந்து திரும்பி வருவதற்கான விமான பயணச்சீட்டு, இரண்டு இரவுகளுக்கான தங்குமிட வசதி மற்றும் உத்தியோகப்பூர்வ ஜெர்ஸி மற்றும் றக்பி பந்து கொண்ட RWC 2015 DHL Merchandise Kit உம் உள்ளடக்கப்பட்டிருந்தன.

“இதுவே எனது முதலாவது வெளிநாட்டு பயணம். வாழ்நாளில் ஒரேயொரு தடவை மாத்திரம் கிடைக்கும் இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய DHL நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்தகைய பெருமைக்குரிய றக்பி போட்டியில் ஓர் அங்கமாக இருந்ததையிட்டு நான் மிகவும் பெருமையடைவதுடன், என்றேனும் ஒருநாள் இலங்கை சார்பாக இத்தகைய போட்டியில் பங்குபற்ற என்னை ஊக்கப்படுத்தியுள்ளது” என மேலும் ஹர்ஷ தெரிவித்தார்.

என்றேனும் தனது பாடசாலை மற்றும் தேசிய அணி சார்பாக போட்டியிட எதிர்பார்த்துள்ள இளம் வீரர்களை உற்சாகமூட்டுவதாக இந்த உலகளாவிய நிகழ்வு அமைந்துள்ளது. இந்த அனுபவம், றக்பி போட்டிக்கான அவர்களது அன்பை வலுப்படுத்துவதுடன், தமது பாடசாலை மற்றும் தேசத்தை பெருமைகொள்ளச் செய்வதற்கான அவர்களின் கனவினை மேலும் உறுதியாக்குவதாக அமைந்துள்ளது.  

RWC 2015 போட்டியில் உத்தியோகபூர்வ பந்தினை கையளிக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கிடும் DHL இன் பந்து கையளிப்பு திட்டத்தில் பங்கேற்ற 42 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மாணவர்களுள் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த ஷர்ஷ சமரசிங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.