சஜித் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிச்­ச­ய­மாக தீர்­வினை வழங்­குவார்: சுவா­மி­நாதன்

Published By: J.G.Stephan

09 Nov, 2019 | 01:29 PM
image

25 வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த ஒருவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதனைச் சரி­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

வவு­னியா வைத்­தி­ய­சாலை முன்­பாக ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் வன்னி மாவட்ட இணைப்­பாளர் ரசிகா கம­கேயின் அலு­வ­ல­கத்தை திறந்து வைத்து உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 



அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சஜித் பிரே­ம­தாச ஒரு நேர்­மை­யான மனிதர். செய்யும் செயற்­பா­டு­களை தனது தந்­தை­யைப் போல் நேர்­மை­யாக செய்­பவார். ஜெய­வர்த்­தன, பிரே­ம­தாச அதன் பின்­ன­ரான தலை­வர்கள் என பல­ருடன் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக நான் வேலை செய்தேன். என்னைப் பொறுத்­த­வரை ஐக்­கிய தேசியக் கட்சிதான் முக்­கியம். 1977 இல் இருந்து நான் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருக்­கின்றேன். அந்தக் கட்­சியில் இருந்து வேறு கட்­சி­க­ளுக்கு தாவ­வில்லை. அந்­த­வ­கையில் இன்று ஜனா­திபத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. அதற்கு எங்­க­ளு­டைய அபேட்­சகர் சஜித் பிரே­ம­தாச தான் காரணம். அவர் நிச்­ச­ய­மாக 16ஆம் திகதி வெற்றி பெற்­று தமிழ் மக்­க­ளுக்கு இருக்கும் பிரச்­ச­ினை­களை தீர்ப்பார். 

ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் ஒரு ஜனா­தி­பதி வேட்­பாளர் போட்­டி­யி­டு­கின்றார் என்­பது பெரு­மைப்­பட வேண்­டிய விடயம். 25 வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஐக்­கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் போட்­டி­யிட சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அது­வரை வேறு கட்­சி­களைச் சேர்ந்­த­வர்கள்தான் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தயவில் ஜனா­தி­ப­தி­யாக வந்­தி­ருக்­கின்­றார்கள். தற்­போ­தைய ஜனா­தி­பதி சிறி­சே­னவும் எங்­க­ளு­டைய கட்­சி­யல்ல. ஆனாலும் நாங்கள் சேர்ந்து அவ­ரு­டைய பெயரை ஆமோ­தித்தோம். ஆனால் இன்று அப்­ப­டி­யில்லை. எங்­க­ளு­டைய ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த சஜித் பிரே­ம­தாச போட்­டி­யி­டு­கின்றார். 

எத்­த­னையோ பிரச்­சி­னைகள் தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கின்­றன. அர­சியல் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதை அர­சி­யல்­வா­திகள் சஜித் பிரே­ம­தா­ச­வுடன் பேசி தீர்ப்­பார்கள். தற்­போது பொருட்­களின் விலை­வாசி கூடி­யுள்­ளது. வரி கார­ண­மா­கவே அவ்­வாறு கூடி­யுள்­ளது. அந்த நிலைப்­பாட்டை நாங்கள் குறைக்­கலாம். சஜித் பிரே­ம­தாச நாட்டின் தலை­வ­ராக வந்தால் அவர் வெளி­நாட்டில் இருக்கும் முத­லீட்டின் மூலம் வரு­மா­னத்தைக் கூட்­டலாம். தற்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­களின் தலை­மையில் நடக்கும் அர­சாங்­கத்தில் சென்ற ஆண்டு முன்­னைய அர­சாங்கம் பெற்ற கடன்­களை நாங்கள் செலுத்­தி­யி­ருக்­கின்றோம். 

கடன்­களை செலுத்­தி­ய­வண்­ணம்தான் இவ்­வ­ளவு வேலை­க­ளையும் செய்­கின்றோம்.  கடனை  நான்­கரை வரு­ட­மாக ஐக்­கிய தேசியக் கட்சி செலுத்­தி­யது. அந்த கடனில் 75, -80 வீதம் மீள­ச்செ­லுத்­தப்­பட்­டுள்­ளது. இனி எல்­லோரும் நன்­மை­யடை­யக்கூடிய நிலை உரு­வாகும். அடுத்து வரும் 10 வரு­ட­காலம் ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தற்கு சஜித்துக்கு வயது இருக்கிறது. இளம் வேட்பாளர் அவர். அவர் இந்த நாட்டை இன்னும் செழுமையாக மாற்றுவார் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிகா கமகே, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08