மலையகத்தில் சுத்தமான குடிநீர் பெறக்கூடிய வசதிகள் இருக்கின்ற போதிலும் இம்மக்கள் இன்னும் குடிநீர் பெறமுடியாத நிலையில் வாழ்ந்து வருவது வேதனை குறிய விடயமே.

இன்று நாட்டில் உள்ள நகரங்களில் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர் தட்டுபாடாக இருந்தாலும் அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் சுத்தமான குடிநீரே கிடைக்கபடுகின்றது.

ஆனால் மலையக பகுதிகளில் அதிகமான வளங்கள் இருக்கின்றபோதிலும் இம்மக்கள் தங்களின் தாகத்தினை தீர்ப்பதுக்காக ஒரு குடம் குடி நீர்க்காக பல மணி நேரம் காத்துகிடப்பதை யாரிடம் சொல்வது.?

மலையகம் என்றாளே நீர் வளம் நிரம்பியபகுதி இங்கு பெறப்படுகின்ற நீரினை சுத்திகரிக்கபட்டு போத்தல்களில் அடைக்கப்பட்டு அதிக விலைக்கு நகரங்களில் விற்பனை செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

இதற்கான தொழிற்சாலைகளும் இயங்கி வருவதினை அவதானிக்க முடியும் அத்தோடு பாராளுமன்றத்தில் நீர்பாசன அமைச்சும் தனியாக உள்ளதுடன்  இத்திட்டத்தினை அவதானிக்க அதிகமான அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.

மலையகத்தில் சுத்தமான நீருக்கு பதிலாக சேறு கலந்த நீரினை பருகவேண்டிய துர்பாக்கிய நிலை தொடர்கின்றது. தலவாக்கலை ஓக்ஸ்போட் தோட்டத்தில் 150 இற்கு மேற்பட்ட மக்கள் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் வீடுகள் இன்றி தற்காலிக வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

பாதை மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது இப்பிரச்சினை ஒரு புறம் இருக்க இம்மக்கள் தற்போது குடிநீர் பெறமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இத்தோட்டத்தில் சுத்தமான குடிநீரை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றபோதிலும் தோட்ட நிர்வாகம் இதில் அக்கறைகாட்டாமல் செயல்படுவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு குடிநீரை பெற்றுத்தருமாறு மலையக அரசியல் வாதிகளிடம் கோரிக்கைவிடுத்தபோதிலும் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் முன்வரவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என இத்தோட்டமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)