77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட விசாலமான இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியால் திறப்பு

Published By: Digital Desk 3

08 Nov, 2019 | 04:59 PM
image

தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும் எமது முப்படையினர் உட்பட பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கதாகும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்தார்.

பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (08) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார்.

மரியாதை வேட்டுக்களுடனும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனும் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து இராணுவ தலைமையகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

பெலவத்த, அக்குரேகொடயில் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு கடந்த 2011 ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது.

இதற்கான உத்தேச செலவு 53.3 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன், இலங்கையில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய கட்டிட நிர்மாணத் திட்டம் இதுவாகும்.

அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகளையும் இந்த கட்டிடத்தொகுதி கொண்டுள்ளது.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இதன் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு, முப்படைத் தலைமையகம் ஆகிய கட்டிடத்தொகுதிகளின் முதற்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இராணுவத் தலைமையகமும் அலுவலக கட்டிடத்தொகுதியும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் இலங்கை இராணுவ தலைமையகத்தின் கீழ் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தலைமை அலுவலகங்கள் விரைவில் இந்த கட்டிடத்தொகுதிக்குள் கொண்டுவரப்படவுள்ளதுடன், இராணுவ தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பிரிவுகளில் அமைந்திருப்பதுடன், வாடகைக்கு பெறப்பட்டிருந்த கட்டிடங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்டுவந்த 50 மில்லியனுக்கும் அதிக தொகையை இதன் மூலம் மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் தேசிய பாதுகாப்பு, நாட்டின் பௌதீக அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்பேணல் நடவடிக்கைகளில் முப்படையினரும் மேற்கொண்டுவரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.

தனது 05 வருட பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் ஜனாதிபதி என்ற வகையிலும் நடைமுறைப்படுத்திய அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் தனக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கான சேவை பதக்கங்களும் சிவில் பணிக்குழாமினருக்கான சேவை பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38