ஊழலற்ற அமைச்சரவையை உருவாக்குவேன் என கோத்தாபயவினால்  பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?  -மனுஷ 

Published By: R. Kalaichelvan

08 Nov, 2019 | 03:18 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தனது புதிய அமைச்சரவையில் ஊழல்வாதிகள், வெளிவேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு இடமிருக்காது என்று சஜித் பிரேமதாச நேற்று பகிரங்கமாக அறிவித்தார்.

இவ்வாறானதொரு பகிரங்க அறிவிப்பை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் மேற்கொள்ள முடியுமா என்று பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சவால்விடுத்தார்.

அத்தோடு சிங்கள பௌத்த முதன்மைநிலை அழிக்கப்படுகின்றது என்ற எண்ணக்கருவையும், இனவாதம் மற்றும் மதவாதத்தையும் சாதாரண மக்களின் மனதில் புகுத்தி, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றே பொதுஜன பெரமுன முயற்சிக்கின்றது. அதனைத் தவிர அவர்களிடம் வேறு திட்டங்கள் எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று  வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டின் அனைத்துத் தரப்பினர் தொடர்பிலும் சிந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் வகையிலான தேர்தல் விஞ்ஞானமொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

பெண்கள், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வரிக்கொள்கையிலும் சாதகமான பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தனது புதிய அமைச்சரவையில் ஊழல்வாதிகள், வெளிவேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு இடமிருக்காது என்று சஜித் பிரேமதாச நேற்று  பகிரங்கமாக அறிவித்தார். 

இந்நிலையில் இவ்வாறானதொரு பகிரங்க அறிவிப்பை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் மேற்கொள்ள முடியுமா என்று நான் சவால் விடுகிறேன். 

ஏனெனில் அவருடைய தரப்பிலுள்ள பலர் மீதும் பல்வேறு வழக்குகள் காணப்படுகின்றன். எனவே அத்தகைய குற்றவாளிகள், ஊழல்வாதிகளை அமைச்சரவைக்கு உள்வாங்கமாட்டேன் என்று அவர் கூறவேண்டும்.

அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கமுடியாமல் போகலாம் என்றுகருதி சமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தக் காரணமாக அமைந்த வழக்கொன்று அண்மையில் நடைபெற்றது. 

அதில் உண்மை வெளிப்பட்டுவிடும் என்ற சந்தேகம் கோத்தாபய ராஜபக்ஷ தரப்பிடம் இருந்தது. எனினும் குடியகல்வு, குடிவரவு திணைக்களத்தின் முக்கிய கோப்புகள் காணாமல்போனமையின் காரணமாக அவ்வழக்கில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெறமுடிந்தது.

ஆனால் அன்று நீதிமன்றத்தின் ஊடாக தன்னிடம் இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதையே கோத்தாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார். 

ஆனால் அவர் இலங்கைப் பிரஜை என்பதை இன்னமும் அவரால் உறுதியாக வெளிப்படுத்த முடியவில்லை. அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந்நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் இதுவரை கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19