அரசியலிலிருந்து விலகுவாரா மங்கள? - முன்னிலை சோஷலிசக் கட்சி கேள்வி

Published By: Vishnu

08 Nov, 2019 | 03:45 PM
image

(ஆர்.விதுஷா)

நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்த சவாலையேற்று அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள மிலேனியம் சலேஞ் கோர்பரேசன் உடன்படிக்கையில் உள்ள பாதகமான விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கிஸ்தர் புபுது ஜெயகொட, நிதியமைச்சர் அரசியலிலிருந்து விலகிக் கொள்வாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிச  கட்சியின்  காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  அவர்  மேலும் கூறியதாவது  ,

மிலேனியம் சலேஞ் கோர்பரேசன் ஒப்பந்தம்  தொடர்பில்  பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன. மிலேனியம்  சலேஞ்  கோர்பரேசன் என்பது திறந்த பொருளாதார  கொள்கையின்  ஊடாக  இலாபம்  உழைக்கும் அமெரிக்க  நிறுவனம்  ஆகும்.

இது அமெரிக்காவில் உள்ள   தனியார் நிறுவனமாகும்.  அந்த நிறுவனத்துடனான   ஒப்பந்தத்தில்  அவர்கள்  முதலில்  குறிப்பிட்டிருந்த விடயம் வறுமையை ஒழித்தல்,   பயங்கரவாதம்  தோன்றுவதற்கு  ஏதுவான  காரணிகளை இல்லாதொழித்தல், போசனை   உணவு  உற்பத்தி என்பனவாகும். 

மிலேனியம்  சலேஞ்  கோர்பரேசன்  மேலும் 29  நாடுகளுடன்  இந்த உடன்படிக்கையை  மேற்கொண்டுள்ளது.  அவர்கள்   உடன்படிக்கையை  மேற்கொண்டுள்ள  எந்த நாட்டிலும்   பயங்கரவாத  நிலைமை இல்லை  அதேபோல், வறுமையை  ஒழிப்பதாக  குறிப்பிட்டுள்ளனர். 

அந்த வகையில்  எமதுநாட்டை  எடுத்து கொண்டால்   மொனராகலை , ஹம்பாந்தோட்டை , அம்பாறை, வவுனியா, புத்தளம்,  முல்லைத்தீவு   போன்ற  மாவட்டங்களே  வறிய  பிரதேசங்கள்  ஆகும். 

ஆயினும் அவர்கள் இந்த  மாவட்டங்களை தெரிவு செய்யவில்லை. மாறாக  திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களையே  தெரிவு  செய்துள்ளனர். இதன் ஊடாக  வறுமையை  ஒழிப்பதற்காக  கூறப்படுவது  முற்றிலும் பொய்யான  விடயம்  ஆகும்.   வறுமையை  ஒழிப்போம் என்னும் போர்வையில்  கொண்டுவரப்படும்  வேறொரு   திட்டமே இந்த  ஒப்பந்தமாகும்.

அமெரிக்காவின்  குறிக்கோளாக  இருப்பது   திறந்த பொருளாதார கொள்ளையின்  ஊடாக அனைத்து நாடுகளின்  வளத்தையும் தம்வசப்படுத்துவதே  ஆகும். மிலேனியம் சவால்கள்  ஒப்பந்தத்ததை மாத்திரம் பார்ப்பதன் ஊடாக  பிரச்சினைக்கு  தீர்வினை  காண  முடியாது. 

இந்த  ஒப்பந்தத்தில்  மூன்று  வகை  உள்ளது.  மிலேசியம்  சலேஞ்  உடன்படிக்கை , உடன்படிக்கையை  செய்வதற்கு  ஏதுவான  காரணங்களை ஆராய்தல்,  கைச்சாத்திடுவதற்கு  அமெரிக்க  காங்கிரஸ்  உடன் படுதல்  போன்ற  மூன்று  உடன்படிக்கைகள் இதன்  வழிவருகின்றன. 

அவற்றில்  முதலில்  2018  ஆம் ஆண்டிலும், இவ்வருடத்தில்  ஏப்ரல்  மாதத்திலும் அதற்கான  ஆய்வு  நடவடிக்கைளை அமெரிக்கா  மேற்கொண்டிருந்தது.  இந்நிலையிலேயே   இரண்டாவது வகை  ஒப்பந்தத்தில்  கைச்சாத்திடும் நடவடிக்கையையே  அமெரிக்கா  தற்போது  மேற்கொண்டுள்ளது.  

இந்நிலையில் , நாட்டிற்கு  கேடு  விளைவிக்கும் பகுதி அடையாளம்  காட்டும் பட்சத்தில்  தான் அரசியலிலிருந்து நீங்குவதாக  நிதியமைச்சர் கூறியிருந்தார். அவ்வாறெனின்  இத்தகைய நாட்டிற்கு  கேடு விளைவிக்கும்  விடயங்கள்  தொடர்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.  அமைச்சர் அரசியலிலிருந்து விலகத்  தயாரா ? எனவும் கேள்வி எழுப்பினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08