கையும் - மொட்டும் ஒரு தாய் பிள்ளைகள் : மஹிந்த ராஜபக்ஷ 

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 08:48 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளைகளாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், மேலதிக தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம், 1500 ரூபா நாளாந்த சம்பத்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றஞ்சுமத்தினார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோகாலை மாவட்மத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் , 

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறது. 

இவ்விரு கட்சிகளும் ஒரு தாய் மக்களாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சி பலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் வழங்கினார். 

சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தீர்மானித்தது. எதிர்கட்சியில் இருந்து கொண்டு கட்சியொன்றை உருவாக்கினோம். அந்த கட்சியூடாக போட்டியிட்டு உள்ளுராட்சி தேரதலில் நூற்றுக்கு 71 வீதத்தில் வெற்றி பெற்றோம். 

உள்ளுராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன , சுதந்திர கட்சி தனித்தனியே போட்டியிட்டது. அதே எல்பிட்டி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம். 

எனினும் இருகட்சிகளினதும் முடிவை இணைத்த போது 70 வீத வாக்கினைப் பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளோம். எனவே இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27