தேர்தல் சட்டங்கள் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விஷேட அறிவுறுத்தல்  : பொலிஸ் பேச்சாளர் 

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 07:44 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தலின் போது சட்டவிரோதமாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை அகற்றுவதற்காக 1661 ஊழியர்களை பணியில் ஈடுப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் மத்தியல் பிரசித்தி ஏற்படுத்துவதற்காக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடுகள் தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்குவதிலும், வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடங்கிய சுவரொட்டிகளை காட்சிப்படுத்தி படுத்தியும் வருகின்றனர்.

தேர்தலின் போது சுவரொட்டிகள் ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இந்த செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக தற்காலிகமாக 1661 ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸ் தலைமையகத்திற்கு மூன்று பேரையும், ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு இருவரையும் நியமிப்பதற்கான அனுமதி ஏற்கனவே கிடைக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 1045 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையங்களுக்கு மேலும் ஒருவரையும் ,  மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு நிலையங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவிற்கு ஐவரையும் நியமிப்பதற்காக அனுமதிக்கிடைகப்பட்டுள்ளது.

இதேவேளை வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரங்களைன பகிர்ந்தளிப்பவர்கள் ,  வேட்பாளர்களின் புகைப்படங்களை பிரசித்திபடுத்தும் வகையில் செல்வதையோ,  சங்கீத வாத்தியங்களை ஒலிபரப்பிக் கொண்டு செல்வதையோ மற்றும் பட்டாசு கொழுத்துவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்க 11 பேர் அல்லது அதற்கு குறைவான தொகையினரே செல்லமுடியும். இந்நிலையில் அதிகமானோர் சென்றால் அது பேரணியாகவே கருதப்படும். இதேவேளை இவ்வாறு இல்லங்கள் தோறும் வழங்கப்படும் துண்டு பிரசுரங்களில் அச்சிட்டவரின் பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டிருப்பது கட்டாயமாகும்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஒருவருக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையில் சமாதானமாக முன்னெடுக்குமாறும் தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜனதிபதி தேர்தல் தொடர்பில் 55 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இதன்போது 84 சட்டமீறல்கள் பதிவாகியுள்ளதுடன், முறைப்பாடுகள் மற்றும் சட்டமீறல்கள் 54 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும், பொலிஸ் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39